கூடுதல் வாக்குகள் இல்லாமலேயே அதிக சீட் வெல்லும் பாஜக! தொகுதி மறுசீரமைப்பு.. கரப்பான் கட்சி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தொகுதி மறுவரையறையால் பாஜகவுக்கு கூடுதல் லோக்சபா இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கரப்பான் பூச்சி கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார். வாக்காளர்களின் எண்ணிக்கையோ, அவர்கள் வாக்களிக்கும் முறையோ மாறாமல் இருந்தாலும், தொகுதிகளின் எல்லைகளை மாற்றி அமைப்பதன் மூலம் தேர்தல் முடிவுகள் மாறக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.

இளைஞர்கள் அமைப்பாக உருவான கரப்பான் பூச்சி ஜனதா பல்வேறு விவகாரங்களிலும் மத்திய அரசை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. முதலில் நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக மிக பெரிய போராட்டத்தை நடத்தியிருந்தது. தொடர்ந்து தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தும் SIR குளறுபடிகள் குறித்தும் மிக பெரிய போராட்டங்களை நடத்தியது. இந்த சூழலில் தான் தொகுதி மறுசீரமைப்பு குறித்தும் கரப்பான் ஜனதா கருத்து கூறியுள்ளது.

Delimitation BJP

விவாதம்

தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு முன்மொழிந்துள்ள திட்டம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 543ல் இருந்து 816 ஆக உயர்த்தப்பட்டால், பாஜகவுக்கு தேர்தல் ரீதியாகப் புதிய சாதகமான சூழல் உருவாகும் என்று எதிர்க்கட்சித் தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், கரப்பான் பூச்சி கட்சியை சேர்ந்த அபிஜீத் தீப்கே, தொகுதி மறுவரையறை எப்படி தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடும் என்பதை விளக்கியுள்ளார்.

அபிஜீத் தீப்கே

இது தொடர்பாக கரப்பான் பூச்சி கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே கூறுகையில், "தொகுதி மறுசீரமைப்பு: புதிய வாக்குகளை பெறாமலேயே பாஜக எப்படி அதிக இடங்களைப் பெற முடியும்? எளிதாக புரிந்து கொள்ள 1,000 வாக்காளர்களை கொண்ட ஒரு தொகுதியை நாம் உதாரணமாக எடுத்து கொள்வோம்.

பாஜகவுக்கு 400 வாக்குகள் விழுகிறது. எதிர்க்கட்சிக்கு 600 வாக்குகள் விழுகிறது என வைத்து கொள்வோம். அதிக வாக்குகளை பெற்ற எதிர்க்கட்சி அந்த தொகுதியில் வெற்றி பெறுகிறது தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு தலா 500 வாக்காளர்களைக் கொண்ட 2 தொகுதிகள் அது பிரிக்கப்படும். முதலாவது தொகுதியில் பாஜக 260, எதிர்க்கட்சி 240 விழும். 2வது தொகுதியில் தொகுதியில் பாஜக 140வுக்கு எதிர்க்கட்சி 360 வாக்குகள் விழும். அதாவது பாஜக மற்றும் எதிர்க்கட்சி தலா ஒரு இடத்தில் வெல்கிறது.

முடிவுகள் மட்டும் மாறுது

எதிர்க்கட்சி தனது தற்போதைய இடத்தை தக்கவைத்து கொள்கிறது (ஒருவேளை இதனால்தான் சிலர் தொகுதி மறுசீரமைப்பை ஆதரிக்கிறார்களோ என்னவோ), ஆனால் முன்பு ஒரு இடம்கூட வெல்லாத பகுதியில் பாஜக இப்போது ஒரு புதிய இடத்தை பெறுகிறது. இதை தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். வரும் காலத்தில் தேர்தல்களில் இதுவே பாஜகவுக்கு சாதகமாக அமையும். வாக்காளர்கள் மாறவில்லை. அவர்களின் வாக்களிக்கும் முறையும் மாறவில்லை. ஆனால், தொகுதிகளின் எல்லைகள் மாற்றப்படுவதால் தேர்தல் முடிவே மாறுகிறது. இதுதான் தொகுதி மறுவரையறை மூலம் பாஜகவுக்கு கிடைக்கக்கூடிய ஆதாயம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

கரப்பான் பூச்சி ஜனதா

அதாவது மொத்த வாக்கு எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரே பகுதியில் உள்ள வாக்காளர்களை வெவ்வேறு தொகுதிகளாக பிரிப்பதன் மூலம் பாஜக வெல்லும் இடங்கள் அதிகரிக்கும் என்பதே அவரது வாதம். இதற்கிடையே அரசியல் வேறுபாடுகளை கடந்து, தொகுதி மறுவரையறை மசோதாவை அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் கரப்பான் பூச்சி கட்சி சார்பிலும் தனியாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை என்ற பெயரில் ஆளும் கட்சிக்கு சாதகமாக தொகுதிகளின் எண்ணிக்கை மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கரப்பான் பூச்சி கட்சி கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+