Pooja bumper: பூஜா பம்பர் லாட்டரி.. 12 கோடியை தட்டி தூக்கிய அதிர்ஷ்டசாலி! தமிழக எல்லை மாவட்டத்திற்கு அடித்த யோகம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் இன்று நடைபெற்றது. JA, JB, JC, JD, JE என 5 வரிசை தொடர்களில் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன. இதில் முதல் பரிசாக ரூ.12 கோடி தமிழக எல்லை மாவட்டத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. லாட்டரி டிக்கெட் எண் JC 234427 என்ற எண்ணுக்கு அடித்து இருக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு குலுக்கல் நடைபெற்ற நிலையில் பரிசை வென்றது யார்? என சேட்டன்கள் மட்டுமின்றி அங்கு டிக்கெட் வாங்கிய தமிழகத்தை சேர்ந்தவர்களும் ஆர்வத்துடன் தங்கள் டிக்கெட் எண்களை பரிசோதித்து வருகின்றனர்.

கேரளாவில் பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று (நவம்பர் 28) நடைபெற்றது. இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.12 கோடி அளிக்கப்படுகிறது. டிக்கெட்டின் விலை ரூ 300 ஆகும். இன்று பிற்பகல் 2 மணியளவில் திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் டிக்கெட் குலுக்கல் நடைபெற்றது. முதல் பரிசு யாருக்கு அடிக்கபோகிறதோ? என்ற பெரும் எதிர்பார்ப்புடன் கேரள சேட்டன்கள் காத்திருந்தனர்.

Pooja bumper lottery 2026 first Prize winning ticket sold at Tamil Nadu border district in kerala

முதல் பரிசு யாருக்கு அடித்தது?

இந்நிலையில் 2 மணிக்கு லாட்டரி குலுக்கல் தொடங்கியது. இதில் முதல் பரிசு ரூ.12 கோடி தமிழக எல்லை மாவட்டமான பாலக்காட்டில் அடித்துள்ளது. பாலக்காட்டில் உள்ள கிங்ஸ்டார் ஏஜென்சியில் வாங்கிய டிக்கெட்டிற்கு தான் இந்த முதல் பரிசு அடித்து இருக்கிறது. அதாவது லாட்டரி டிக்கெட் எண் JC 234427 என்ற எண்ணுக்கு அடித்து இருக்கிறது.

கேரள சேட்டன்கள் மட்டுமின்றி அங்கு சென்று டிக்கெட் வாங்கியிருந்த தமிழர்களும் தங்கள் டிக்கெட் எண்களை பரிசோதித்து வருகின்றனர். நமக்கு முதல் பரிசு அடித்துள்ளதா என டிக்கெட் எண்களை பரிசோதித்து வருகிறார்கள். எப்படியும் இன்னும் இரு நாட்களில் முதல் பரிசு அடித்த அதிர்ஷ்டசாலி யார் என்று தெரிந்துவிடும். ஆறுதல் பரிசாக இதே எண் கொண்ட 234427 என்ற எண் அடித்தவர்களுக்கு அதாவது முதல் பரிசு அடித்த எண் கொண்ட டிக்கெட்டுகளுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.

இரண்டாம் பரிசு ரூ. 50 லட்சம் JA 400634, JA 969347, JB 346893, JB 866718, JC 648565, JC 682550, JD 304468 ஆகிய டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படும்.

பரிசு விவரங்கள்

நடப்பு ஆண்டு அச்சடிக்கப்பட்ட 45 லட்சம் டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன. வழக்கம் போல பாலக்காட்டில்தான் அதிக டிக்கெட் விற்பனை நடைபெற்றுள்ளது. முதல் பரிசாக ரூ.12 கோடி மட்டுமின்றி ஆறுதல் பரிசாக ரூ.1 லட்சம் அளிக்கப்படுகிறது. 2-வது பரிசாக 50 லட்சம் 10 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது. 3-வது பரிசாக ரூ.5,00,000 10 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது. 4-வது பரிசாக ரூ.3 லட்சம் 5 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படும்.

5 வது பரிசாக ரூ.2 லட்சம் 10 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது. 6-வது பரிசாக ரூ.5 ஆயிரம் 8,100 பேருக்கு வழங்கப்படுகிறது. இது கடைசி 4 இலக்கங்களுக்கு மட்டும் வழங்கப்படும். 18 முறை குலுக்கல் நடைபெறும். 7-வது பரிசாக ரூ.1,000 வழங்கப்படும். மொத்தம் 64,800 பேருக்கு 7-வது பரிசு வழங்கப்படும்.

கடந்த முறை யாருக்கு அடித்தது?

8-வது பரிசாக ரூ.500 வழங்கப்படும். 1,29,600 வின்னர்களுக்கு 500 ரூபாய் கிடைக்கும். 9-வது பரிசாக ரூ.300 வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு பூஜா பம்பரில் முதல் பரிசான ரூ.12 கோடி JD 545542 -அடித்தது. பாலக்கட்டில் உள்ள சுரேஷ் என்ற ஏஜென்சியில் விற்ற டிக்கெட்டிற்கு இந்த பரிசு விழுந்து.

கையில் எவ்வளவு கிடைக்கும்?

முதல் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலிக்கு 12 கோடி முழுவதுமாக கிடைக்காது. 12 கோடி ரூபாயில் லாட்டரி ஏஜெண்ட் கமிஷனாக 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். சுமார் 30 சதவீதம் வருமான வரியாக பிடிக்கப்படும் மொத்த தொகையில் தோராயமாக 60 சதவீதம் மட்டுமே 12 கோடி ரூபாயில் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+