Pooja Bumper: ரூ.12 கோடி யாருக்கு? கேரளாவில் சூடு பறக்கும் பூஜா பம்பர் சேல்ஸ்.. கடந்த முறை பரிசு விழுந்த எண் எது?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கலுக்கு இன்னும் 2 வாரமே உள்ள நிலையில், டிக்கெட் விற்பனை அனல் பறக்க நடைபெற்று வருகிறது. இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.12 கோடி வழங்கப்பட உள்ளது. மொத்தம் 45 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு இருப்பதால் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும் என எதிர்பார்ப்பு கேரள லாட்டரி பிரியர்களிடையே நிலவுகிறது. பூஜா பம்பரில் கடந்த ஆண்டு எந்த எண்ணிற்கு பரிசு அடித்தது என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

கேரளாவில் பூஜா பம்பர் லாட்டரி விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது. முதல் பரிசு ரூ. 12 கோடி என்பதால், டிக்கெட்டை வாங்கி ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்ற மனக்கோட்டை கட்டிக்கொண்டு லாட்டரியை பலரும் ஆர்வத்துடன் வாங்கி வருகிறார்கள். வரும் 28 ஆம் தேதி குலுக்கல் நடைபெற உள்ளது.

Pooja Bumper 12 crore jackpot lottery ticket sales heat up in Kerala Which number won last time

பரிசுகள் விவரம் லிஸ்ட்:

இன்னும் இரண்டு வார காலமே இருப்பதால் இறுதி கட்ட விற்பனை அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. மொத்தம் 45 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிட திட்டமிட்டுள்ளது. கடந்த ஓணம் பம்பர் டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்தது போலவே இந்த டிக்கெட்டும் காலியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜேஏ, ஜேபி, ஜேசி, ஜேடி மற்றும் ஜேஇ என 5 சீரியஸ்களில் இந்த டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன.

முதல் பரிசு ரூ.12 கோடி மட்டுமின்றி ஏராளமான பரிசுகள் வழங்கப்படுகின்றன. இரண்டாவது பரிசாக ரூ.50 லட்சம் 10 டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படும். மூன்றாவது பரிசாக ரூ. 5 லட்சம் 10 டிக்கெட்டுகளுக்கு வழ்ங்கப்படும். 4 வது பரிசாக ரூ. 3 லட்சம் 5 டிக்கெட்டுகளுக்கு வழங்கப்பட உள்ளது. வழக்கம் போல பாலக்காடு மாவட்டம்தான் இந்த முறையும் சேல்ஸில் டாப்பில் இருக்கும் என்று தெரிகிறது.

கடந்த சில பம்பர்களில் முதல் பரிசு விழுந்த எண்கள்

* ஓணம் பம்பர்: TL 360615 (முதல் பரிசு ரூ.30 கோடி - பரிசு விழுந்த இடம் கண்ணூர்)

* மான்சூன் பம்பர்: MC 576896 (முதல் பரிசு ரூ.10 கோடி, எர்ணாகுளம்)

* விஷு பம்பர்: VB 135452 (ரூ.12 கோடி - கொல்லம்)

* சம்மர் பம்பர்: SB 517026 (ரூ.10 கோடி - பாலக்காடு)

* கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர்: XC 138455 - (ரூ.20 கோடி - கோட்டயம்)

* பூஜா பம்பர் 2025: JD 545542 (ரூ.12 கோடி - பாலக்காடு)

குலுக்கல் எப்போது?

முதல் பரிசு வெல்பவர்களுக்கு வரிகள் பிடித்தம் போக ரூ.6 முதல் 7 கோடிகள் கையில் கிடைக்க வாய்ப்புள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் வரும் 28 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு குலுக்கல் நடைபெறுகிறது. முதல் பரிசாக ரூ.12 கோடி வெல்லப்போகும் அதிர்ஷ்ட சாலி யார் என்பது அன்றைய தினம் தெரிந்துவிடும்.

Disclaimer: லாட்டரியை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த செய்தி தரப்படவில்லை. கேரள லாட்டரி உள்பட எந்த ஒரு லாட்டரியும் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். எனவே, தமிழ்நாட்டில் லாட்டரிகள் விற்பனை செய்வது குற்றமாகும். காவல்துறை நடவடிக்கை பாயும். கள்ளச்சந்தையில் விற்பனையாகும் டிக்கெட்டுகளுக்கு கேரள அரசு பரிசும் வழங்காது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+