கடக ராசிக்கு டிசம்பரில் இரட்டிப்பு யோகம்.. தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. கடன் தொல்லை தீரும்
டிசம்பர் மாத ராசி பலன்: நவம்பர் மாதம் நிறைவடைந்து டிசம்பர் மாதம் பிறக்கப் போகிறது. மாதத்தின் ஆரம்பத்திலேயே நிழல் கிரகங்களான ராகு கேதுவின் பெயர்ச்சியும் நடைபெறவுள்ளது. இது 12 ராசிக்காரர்களுக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி, டிசம்பர் மாதத்தில் கடக ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், வேலை, தொழில், குடும்பம் எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
டிசம்பர் மாதம் முதல் வாரத்திலேயே ராகு கேதுக்கள் கும்பம், சிம்ம ராசியில் இருந்து மகரம், கடகத்திற்கு மாறக்கூடிய அமைப்பு 12 ராசிக்காரர்களுக்கும் சாதகமான அமைப்பைக் கொடுக்கும். மாதம் முழுவதும் சிம்மத்தில் குருவும், செவ்வாயும் மங்கள யோகத்தில் சேர்ந்திருப்பது நல்லவிதமான அமைப்பு. மருத்துவம், கட்டடம், நெருப்பு, விளையாட்டு, அதிகாரம் போன்ற தொழில்களைக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதத்தில் நல்ல வருமானங்கள் இருக்கும்.

குருவும், சுக்கிரனும் துலாம் வீட்டில் இருப்பது நன்மையைத் தரும். புதன் பகவான் குருவின் பார்வையில் டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இருக்கும். அந்த வகையில், கடக ராசியினருக்கு இந்த டிசம்பர் மாதத்தில் கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன்
கடக ராசியினருக்கு 4 ஆம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்திருக்கிறார். 2 ஆம் இடத்தில் குரு உள்ளார். சுக்கிரனும், குருவும் சேர்ந்து 10 ஆம் இடத்தைப் பார்ப்பது தொழில் மேன்மையைக் கொடுக்கும். வியாபாரிகள், விவசாயிகள், தொழில் முனைவோர், டெலிவரி பாய், தினக் கூலிகள், வண்டி, வாகனங்கள் ஓட்டுவோர் என எல்லோருக்குமே அற்புதமான பலன்கள் கிடைக்கும்.
யோகம்
ராகு கேதுக்கள் 8 ஆம் இடத்தில் இருந்து 7 ஆம் இடத்திற்கு மாறியிருப்பதும் பெரிய யோகத்தைத் தரும். அடுத்த 5 வருடங்கள் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு நன்றாக இருக்கும். கிரகங்கள் சாதமாக மாறக்கூடிய சூழ்நிலை இருப்பதால் 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் அஷ்டமத்து சனியால் பட்ட கஷ்டங்களில் இருந்தெல்லாம் நிவர்த்தி பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
குருமங்கள யோகம்
பெரிய அளவில் இருந்து வந்த மன அழுத்தங்கள் நீங்கும். இழந்தவற்றை மீட்டெடுக்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். பண இழப்பு, மன இழப்பு, மானம், மரியாதை, கெளரவம், அந்தஸ்து என இழந்த அனைத்து விஷயங்களையும் மீட்டெடுக்கக்கூடிய நல்ல அமைப்பு உள்ளது. அதிசார பெயர்ச்சியில் வரும் குருவும், செவ்வாயும் குருமங்கள யோகத்தை இந்த மாதம் முழுவதும் தருகிறார்.
பண மழை
இது ஒரு மிகப்பெரிய நல்ல யோகமாகும். பண சம்பாத்தியம் அற்புதமாக இருக்கும். பணம் ஓரளவிற்கு நன்றாக வரக்கூடிய சூழல் ஏற்படும். வேலை செய்பவர்களுக்கு இதுவரை அலுவலகத்தில் இருந்து வந்த மனக் கவலைகள், கஷ்டங்கள் தீரும் அமைப்பு உள்ளது. பட்டம், பதவிகள் கிடைக்கும். மேற்படிப்பு படிக்க முடியாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழிலில் ஜாக்பாட்
மாணவர்கள் பிஹெச்டி முடிக்கும் அமைப்பு உள்ளது. பதவி உயர்வு கிடைக்காதவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலையை விட்டு தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் நன்றாக இருக்கும். வாரத்தின் பிற்பகுதியில் சூரியன் 6 இல் அமர்ந்து குருவின் பார்வையில் இருப்பதால் எதிரிகளை வெல்லக்கூடிய யோகம் உண்டு.
வருமானம் உயரும்
எதிர்ப்புகள் விலகும். கடன் தொல்லைகளை தீர்க்கக்கூடிய அமைப்பு ஏற்படும். கடன் தொல்லைகளை தீர்க்கும் அளவுக்கு வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் எந்தவித குறைபாடும் இல்லாமல் இருக்கும். இரட்டிப்பு யோகம் பெறுவீர்கள்.


Click it and Unblock the Notifications
