இந்திய மக்களுக்குத் துரோகம் செய்கிறீர்கள்! தொகுதி மறுவரையறை மசோதா! திமுகவை சாடிய துருவ் ரதீ

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 132-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்த தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிப்பதாக இன்று ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், தேசிய அளவில் இந்த விவகாரம் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

இந்தச் சூழலில், பிரபல அரசியல் விமர்சகரும் யூடியூபருமான துருவ் ரதீ திமுகவின் இந்த முடிவைக் கடுமையாகக் கண்டித்து வீடியோ மற்றும் சமூக வலைதளப் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

துருவ் ரதீ முன்வைத்த 3 முக்கியக் குற்றச்சாட்டுகள்

தமிழ்நாட்டு மக்களும், திமுக தொண்டர்களும் தனது இந்தச் செய்தியை திமுக தலைமையிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள துருவ் ராதே, திமுகவுக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்:

1. இந்திய மக்களுக்குச் செய்யும் துரோகம்

"இந்த மசோதாவை ஆதரிப்பதன் மூலம் நீங்கள் இந்திய மக்களுக்குத் துரோகம் செய்கிறீர்கள்" என திமுகவை நேரடியாகச் சாடியுள்ள துருவ் ராதே, பாஜக அரசு தனது தேர்தல் ஆதாயத்திற்காக இந்தச் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றத் துடிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

2. பாஜகவின் 'வாக்குத் திருட்டுக்கு' வெளிப்படையாகத் துணை போகிறீர்கள்"

மக்களவைத் தொகுதிகளை 543-லிருந்து 815 ஆக உயர்த்தும்போது, புதிய தொகுதிகளின் எல்லைகளைத் தனக்குச் சாதகமாக மாற்றி அமைத்து தேர்தலில் முறைகேடு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஏற்கனவே அசாம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தொகுதி எல்லைகள் பாஜகவுக்குச் சாதகமாகப் பிரிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், திமுக இந்த மசோதாவை ஆதரிப்பது பாஜகவின் இந்த 'வாக்குத் திருட்டு' திட்டத்திற்கு வெளிப்படையாகத் துணை போவதற்குச் சமம் என விமர்சித்துள்ளார்.

3. நடுநிலையான ஆணையம் இல்லாமல் 'நியாயமான மறுவரையறை' சாத்தியமில்லை

"அனைத்து மாநிலங்களுக்கும் 50% இடங்களை உயர்த்துவதால் மட்டுமே இது நியாயமான தொகுதி மறுவரையறையாக ஆகிவிடாது. தொகுதிகளின் எல்லைகளைப் பிரிக்கும் தொகுதி மறுவரையறை ஆணையம் நடுநிலையாகத் தேர்ந்தெடுக்கப்படாத வரை, நியாயமான மறுவரையறை என்பதே கிடையாது என்று துருவ் ராதே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளின் கோட்டைகளைப் பலவீனப்படுத்த பாஜக முயற்சிப்பதாகவும், எதிர்க்கட்சி எம்பிக்களுக்குப் பல கோடி ரூபாய் பேரம் பேசப்படுவதாகவும் அவர் பரபரப்புப் புகார்களை முன்வைத்துள்ளார்.

Dhruv Rathee Slams DMK Over Delimitation Bill Support Calls It Betrayal and Enabler of Vote Chori

திமுகவின் தரப்பு என்ன?

திமுகவின் நிலைப்பாடும் நிபந்தனைகளும் என்ன?

தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு குறித்துப் பேசிய கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மற்றும் கட்சித் தலைமை, தமிழ்நாட்டின் நலன் காக்கப்படும் பட்சத்தில் மசோதாவை ஆதரிக்கத் தயார் என்ற சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளனர். முன்னதாக நேற்று அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் நலனில் திமுக ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

திமுக முன்வைத்த இரண்டு முக்கிய நிபந்தனைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும்போது, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக 50 சதவீத இடங்களை உயர்த்தி, தமிழ்நாட்டின் தற்போதைய 7.18 சதவீதப் பிரதிநிதித்துவம் குறையாமல் பாதுகாக்க வேண்டும்.

1971-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட மாநில வாரியான தொகுதி விகிதத்தை, மேலும் 25 ஆண்டுகளுக்கு.. அதாவது 2051-ம் ஆண்டு வரை மாற்றாமல் அப்படியே வைத்திருக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+