Simmam: சிம்ம ராசிக்கு நல்ல காலம் பிறந்தாச்சு.. கஷ்டங்களுக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ஷ்டம் ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

டிசம்பர் மாத ராசி பலன்: நவம்பர் மாதம் நிறைவடைந்து டிசம்பர் மாதம் பிறக்கப் போகிறது. மாதத்தின் ஆரம்பத்திலேயே நிழல் கிரகங்களான ராகு கேதுவின் பெயர்ச்சியும் நடைபெறவுள்ளது. இது 12 ராசிக்காரர்களுக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி, டிசம்பர் மாதத்தில் சிம்ம ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், வேலை, தொழில், குடும்பம் எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

டிசம்பர் மாதம் முதல் வாரத்திலேயே ராகு கேதுக்கள் கும்பம், சிம்ம ராசியில் இருந்து மகரம், கடகத்திற்கு மாறக்கூடிய அமைப்பு 12 ராசிக்காரர்களுக்கும் சாதகமான அமைப்பைக் கொடுக்கும். மாதம் முழுவதும் சிம்மத்தில் குருவும், செவ்வாயும் மங்கள யோகத்தில் சேர்ந்திருப்பது நல்லவிதமான அமைப்பு. மருத்துவம், கட்டடம், நெருப்பு, விளையாட்டு, அதிகாரம் போன்ற தொழில்களைக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதத்தில் நல்ல வருமானங்கள் இருக்கும்.

december-matha-palan-2026-what-benefits-will-simmam-rasi-receive-this-month

குருவும், சுக்கிரனும் துலாம் வீட்டில் இருப்பது நன்மையைத் தரும். புதன் பகவான் குருவின் பார்வையில் டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இருக்கும். அந்த வகையில், சிம்ம ராசியினருக்கு இந்த டிசம்பர் மாதத்தில் கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசியினருக்கு இந்த டிசம்பர் மாதம் உன்னதமான மாதமாக இருக்கும். கடந்த 2 வருடங்களாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பீர்கள். இந்த மாதத்தில் இருந்து உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு பாதிப்புகள் தென்படும். பெரிய அளவில் பிரச்சனைகள் எதுவும் இருக்காது. இந்த மாதம் டிசம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு ராசிநாதன் குருவின் பார்வையில் வருவதால் முதல் இரண்டு வாரங்கள் சுணக்கமாக இருந்தாலும், மார்கழி மாதத்தில் இருந்து எல்லா விஷயத்தையும் சமாளிக்கக்கூடிய யோகம் ஏற்படும்.

குருவின் அருள்

ராசி, ராசிநாதன் இருவரும் குருவின் தொடர்பில் இருந்தால் அந்த மாதத்தில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அவை தீரும். எந்த விஷயங்களும் சரியில் என்றாலும் அஷ்டமத்து சனியின் கடைசி பாதிக்கு வந்துவிட்டதால் பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. துக்கங்கள், துன்பங்கள் விலகக்கூடிய மாதமாக இருக்கும். உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு சிறிய அளவில் மட்டுமே பாதிப்புகள் இருக்கும்.

கவனம்

அகலகால் வைக்காமல் இருப்பது நன்மை பயக்கும். யாரையும் கண் மூடித்தனமாக நம்புவதைத் தவிர்ப்பது நல்லது. பண விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. விலையுயர்ந்த பொருள்கள் விஷயத்தில் கவனம் தேவை. எந்த விஷயத்தையும் அஜாக்கிரதையாக கையாளாமல் எச்சரிக்கையுடன் இருப்பது உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு நல்லது.

யோகம்

மகம், பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு எல்லா பிரச்சனையில் இருந்தும் விடுதலை பெறக்கூடிய யோகம் ஏற்படும். அரசு அமைப்புகளில், அரசு அதிகாரிகளால் தொல்லை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறையில் இருப்பவர்களுக்கு டிசம்பர் 15 முதல் நிறைய நன்மைகள் கிடைக்கும்.

வருமானம் பெருகும்

தந்தையின் உடல்நலம் நன்றாக இருக்கும். அண்ணன் அக்காளுடன் இருந்து வந்த முரண்பாடுகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். நிரந்தரமான வருமானங்களைப் பெறுவீர்கள். நன்மைகள் கூடுதலாகப் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். 5 சதவீதம் பேர் தான் பாதிப்புகளை உணராமல் இருப்பீர்கள். அவர்களுக்கு கூட இந்த மாதம் வருமானங்கள் பெருகும். சிம்ம ராசிக்கு சோதனைகள் நீங்கக்கூடிய மாதமாக அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+