நடிகை சுவலட்சுமி இப்போ எப்படி இருக்கிறார்? சினிமாவுக்கு கம் பேக்! இயக்குனர் தினம்தோறும் நாகராஜ் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஹோம்லியான ஹீரோயினியாக வந்து ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தவர் சுவலட்சுமி. லவ் டுடே, கோகுலத்தில் சீதை, ஆசை, தினந்தோறும் என பல படங்களில் நடித்த இவரை திருமணத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பார்க்க முடியாமல் போனது. இன்றும் அவருடைய பழைய படங்களை பார்த்த ரசிக்கும் ரசிகர்கள் மீண்டும் இவர் நடிக்க வர வேண்டும் என்று ஆசைப்படும் நிலையில் இயக்குனர் தினந்தோறும் நாகராஜன் இப்போது அவரைப் பற்றி சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

இயக்குனர் பேட்டி

நாகராஜன் பேசுகையில், "சுவலட்சுமி எப்போதுமே நல்ல நடிகை. அவருக்கு சினிமாவில் மட்டுமல்ல, சீரியல்களிலும் நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கும். கல்யாணத்திற்கு பிறகு அவர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். சமீப காலமாக ரசிகர்கள் சுவலட்சுமியை மீண்டும் தேடுவதை நான் கவனித்தேன். இதனால் என்னுடைய அடுத்த படத்தில் மீண்டும் சுவலட்சுமியை நடிக்க வைக்க முயற்சி செய்யப் போகிறேன்.

Suvalakshmi 90s Actress Tamil Cinema Actress

சுவலட்சுமி கம்பேக்

அவருக்கு நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், நாங்கள் நிச்சயம் அவரை அழைத்து வர முடியும். பழைய நடிகைகள் பலரும் இப்போது மீண்டும் நடிக்க வந்து கொண்டிருக்கிறார்கள். பூவே உனக்காக படத்தின் மூலம் பிரபலமான நடிகை சங்கீதா கூட இப்போ சில படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல சுவலட்சுமி மீண்டும் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வர முயற்சி செய்கிறேன்" என்று தினம்தோறும் நாகராஜன் பேசியிருக்கிறார்.

தினம்தோறும் திரைப்படம்

இயக்குனர் தினம்தோறும் நாகராஜன் என்ற பெயர் சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது முரளி, சுவலட்சுமி நடித்த தினந்தோறும் திரைப்படம் தான். திரைப்படம் 1998 ஆம் ஆண்டு வெளியானது. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நாகராஜன் தினம் தோறும் நாகராஜன் என்று அழைத்தனர். சுவலட்சுமியும் அந்த காலகட்டத்தில் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தார்.

அமெரிக்காவில் செட்டில்

2002ல் திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவை விட்டு விலகிய சுவலெட்சுமி அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சினிமாவில் இருந்து விலகிய பிறகும் அவருக்கு சில பட வாய்ப்புகள் வந்ததாகவும் ஆனால் அவர் அதை மறுத்து விட்டதாகவும் அப்போது செய்திகள் வெளியான. முதல் நிலையில் நாகராஜன் இப்போது மீண்டும் சுவலட்சுமி நடிக்க வரும் முயற்சி செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

சுவலட்சுமி மீண்டும் திரையில் வரவேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இயக்குனரின் இந்த பேச்சு நல்ல செய்தியாக இருக்கிறது. அவரை மீண்டும் நடிக்க வைக்க நாகராஜன் முயற்சி செய்வாரா? சுவலட்சுமி அதற்கு சம்மதிப்பாரா? என்பது தான் இனி பார்க்க வேண்டிய விஷயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+