ஆண்கள் பாவம்.. எத்தனை நாட்கள் தான் பெண்களுக்கு மட்டும் சொல்லி கொடுக்க போகிறோம்? நடிகை ரேவதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களுக்கு மட்டும் தொடர்ந்து அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருக்கிறோம், ஆனால் ஆண்களுக்கும் அதே மாதிரி வீட்டில் இருந்து சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன என்பதைத்தான் நடிகை ரேவதி இப்போது பேசி இருக்கிறார். அவர் எழுப்பிய இந்த கேள்வி வெறும் ஒரு பேச்சாக இல்லாமல் குழந்தைகள் வளர்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, ஆண் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்புகள் என பல விஷயங்களை யோசிக்க வைத்திருக்கிறது.

பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விவாதங்கள் அதிகமாகி வரும் நிலையில், ஒரு பெண் வெளியே செல்லும்போது எப்படி இருக்க வேண்டும்? யாரிடம் பேச வேண்டும்? எந்த நேரத்தில் வெளியில் செல்ல வேண்டும்? என பெண்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளும், அறிவுரைகளும் சொல்லப்படுகின்றன. ஆனால் அதே நேரத்தில் ஆண் குழந்தைகள் எப்படி வளர்க்கப்படுகிறார்கள்? அவர்களும் பெண்களை மதிக்க வேண்டும், மற்றவர்களின் விருப்பத்தை எல்லைகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று வீட்டிலிருந்து சொல்லிக் கொடுக்கிறோமா? என்ற கேள்வியும் முக்கியமானது.

Revathi Women Safety Tamil Cinema

நடிகை ரேவதி பேட்டி

இந்த விஷயத்தை தான் நடிகை ரேவதி தனது பேச்சில் சொல்லி இருக்கிறார். "ஆண்கள் பாவம்.. எத்தனை நாள் பெண்களிடம் மட்டும் சொல்ல போகிறோம்? என்ன சொல்ல போகிறோம்? பெண்களுக்கு மட்டும் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருப்பதைவிட, ஆண்களுக்கும் சரியான புரிதலை ஏற்படுத்தி வளர்க்க வேண்டும். ஒரு பெண் எப்போதும் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பது மட்டுமே தீர்வாகி விடாது.

சிவக்குமார் எப்படிபட்டவரு தெரியுமா? சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்! சிறகடிக்க ஆசை ரேவதி பாட்டி ஓபன்
ஆண் குழந்தைகளுக்கும் சிறுவயதில் இருந்தே பெண்களை எப்படி மதிக்க வேண்டும்? அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், தவறான செயல்கள் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். வீட்டிலிருந்தே இப்படியான புரிதல் உருவாகினால் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும்" என ரேவதி பேசி இருக்கிறார்.

Revathi Women Safety Tamil Cinema

ரேவதியின் அறிமுகம்

நடிகை ரேவதி, தமிழ் சினிமாவில் தனக்கென்ன ஒரு அடையாளத்தை உருவாக்கியவர். பாரதிராஜாவின் மண்வாசனை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து மௌன ராகம், புன்னகையை மன்னன், தேவர் மகன், அஞ்சலி, கிழக்கு வாசல் என பல படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்திருக்கிறார். இத்தனை வருடங்கள் ஆனாலும் தொடர்ந்து படங்களிலும் நடித்துக் கொண்டும், இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.

பாரதிராஜா செய்ததை மறக்க முடியுமா? கதறிய நெப்போலியன்! சரத்குமார், குஷ்பூ, ரேவதி வருத்தம்
இப்படி சினிமாவில் பல வருஷங்களாக அனுபவம் கொண்ட ரேவதி சமூகத்தில் பெண்கள் எதிர் கொள்ளும் விஷயங்கள் குறித்து தொடர்ந்து தனது கருத்துக்களை கூறி வருகிறார். தற்போது அவர் பேசியிருக்கும் இந்த விஷயமும் பலரும் சிந்திக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+