சிவக்குமார் எப்படிபட்டவரு தெரியுமா? சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்! சிறகடிக்க ஆசை ரேவதி பாட்டி ஓபன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டிஆர்பி டாப் சீரியல்களில் ஒன்றான சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai serial) மூலம் மீண்டும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருப்பவர் தான் நடிகை ரேவதி. சீரியலில் முத்துவின் பாட்டியாக நாச்சியார் என்ற கேரக்டரில் நடித்து வருகிற இவர், இளம் வயதிலேயே சினிமாவில் ஹீரோயினாக நடித்தவர் என்பது பலருக்கும் தெரியாத தகவலாக இருக்கிறது. தற்போது அவருடைய இரண்டாவது இன்னிங்ஸ் வாழ்க்கை, சீரியல் வெற்றி, நடிகர் சிவகுமாருடன் நடித்த அனுபவம் என பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

ஹீரோயினாக தொடங்கிய திரை பயணம்
ரேவதி சின்னத்திரையில் மட்டுமல்ல, பெரிய திரையிலும் தடத்தை பதித்தவர். நடிகர் சிவகுமார் அறிமுகமான காக்கும் கரங்கள் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் இவர்தான். அதேபோல் புரட்சித் தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் நடித்த தனிப்பிறவி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்துள்ளார். இளம் வயதிலேயே பல முக்கியமான வாய்ப்புகளை பெற்றிருந்தாலும், திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து ஓரளவு விலகி இருந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இரண்டாவது இன்னிங்ஸ்
பல வருடங்களுக்கு பிறகு சின்னத்திரையில் மௌனராகம் சீரியல் மூலம் மீண்டும் நடிப்புக்கு வந்த ரேவதி, அதனை தொடர்ந்து தமிழும் சரஸ்வதியும், பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை போன்ற சீரியல்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் தன்னுடைய சீரியல் அனுபவம் பற்றி பேசும் போது, "தமிழும் சரஸ்வதியும் எனக்கு அடையாளம் கொடுத்தது. ஆனால் சிறகடிக்க ஆசை சீரியலுக்குப் பிறகு என்னால் வெளியே போகவே முடியாத அளவுக்கு ரீச் கிடைத்தது" என்றுள்ளார்.
இந்த சீரியலில் வரும் முதல் நாள் படப்பிடிப்பு அனுபவமும் அவருக்கு மறக்க முடியாத ஒன்று. பேரன் தூக்கி சுத்தும் காட்சியில் வேகமாக தூக்கியதால் கண் சொருகிய சம்பவத்தை நினைவுகூர்ந்த அவர், அப்போது தான் இது சாதாரண பாட்டி கேரக்டர் இல்லை - மிகவும் சுறுசுறுப்பான, ஸ்ட்ராங் கேரக்டர் என்று புரிந்ததாக கூறியுள்ளார்.
மேலும் அவர் தன்னுடைய சினிமா பயணத்தை பற்றி பேசும் போது, நான் ஆரம்பத்தில் கன்னட சினிமாக்களில் தான் நடித்துக் கொண்டிருந்தேன் தமிழில் பல படங்களில் தங்கச்சி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அப்படித்தான் காக்கும் கரங்கள் படத்தில் சிவக்குமாருக்கு ஜோடியாக ஹீரோவின் தங்கச்சியாக நடித்த அப்போது சிவகுமார் ரொம்பவும் சின்ன பையனா இருப்பாரு. இப்ப பேசுற மாதிரி எல்லாம் அப்பா பேசவே மாட்டாரு சூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப அமைதியாக தான் உண்டு வேலை உண்டுன்னு இருப்பாரு. ஆனால் இப்போ அவர் பேசுறத பார்த்தாலே அதிசயமாய் இருக்கும் என்று ரேவதி பாட்டி சிரித்தப்படியே பேசி இருக்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications