விபச்சாரத்தில் மகளை தள்ளிய பழங்குடி தாய்! ஆப்பிரிக்காவில் 7 லட்சத்திற்கு விற்றாராம்! கர்நாடகா கொடுமை

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகத் தம்பதியினர் செய்த காரியத்தை பார்த்தீங்களா.. வெளிநாட்டுக்கு வியாபாரத்திற்காக சென்ற இடத்தில், பெற்ற மகளையே விபச்சாரத்தில் தள்ளியிருக்கிறார்கள்.. பழங்குடியின சங்கத்தினர் மற்றும் தூதரக அதிகாரிகள் இணைந்து இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளனர்.. காவல்துறையினரும் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டம், மல்லேனஹள்ளி அருகே உள்ளது அந்த கிராமம்.. இங்கு ஹக்கி-பிக்கி பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள்.. இங்கு ராஜசேகர், 50, கிராந்தி, 48, என்ற தம்பதி வசிக்கின்றனர். இவர்களுக்கு 20 வயதில் நந்திதா என்ற மகள் உள்ளார்..

Prostitution complaint

கர்நாடகா தம்பதி

இந்த தம்பதி, வனப்பகுதியில் கிடைக்கும் அபூர்வமான மூலிகை செடிகளை சேகரித்து, விற்பனை செய்கின்றனர். அடிக்கடி மூலிகை வியாபாரத்துக்காகவும் வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். அப்படித்தான் 4 மாதங்களுக்கு முன்பே அவர்கள் ஆப்ரிக்காவின் செனகல் நாட்டுக்கு சென்றிருந்தனர்.

ஆனால் சில வாரங்களுக்கு முன்பு ராஜசேகர் உடல்நலம் குன்றி தனியாக இந்தியா திரும்பினார். அவரை தொடர்ந்து மனைவி கிராந்தியும் இந்தியா வந்தார். ஆனால், அவர்களது மகள் வரவில்லை.

7 லட்சம் - விபச்சாரத்தில் மகளை விற்று

மகளை பற்றி உறவினர்கள் விசாரித்தபோது, பெற்றோர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர். இதனால் சந்தேகப்பட்ட உறவினர்கள், சக பழங்குடியின உறவினர்கள், செனகலில் இருந்த மற்றவர்களிடம் விசாரித்தனர். அப்போதுதான், அந்த பெற்றோர் பணத்திற்காகத் தங்கள் மகளை அங்கே இருந்த கும்பலிடம் விற்றுவிட்டுத் திரும்பியது தெரியவந்தது. அங்கு தங்கியிருந்தபோது, விபச்சார கும்பலுக்கு, 7 லட்சம் ரூபாய்க்கு தங்கள் மகளை விற்பனை செய்திருக்கிறார்கள்..

கண்ணீர் வீடியோ அனுப்பிய மகள்

இதனிடையே, அந்த விபச்சார கும்பலிடம் சிக்கி பல கஷ்டங்களை அனுபவித்த நந்திதா, எப்படியோ உறவினர்களை போனில் தொடர்பு கொண்டு, "என்னை பெற்றோரே நரகத்தில் தள்ளிவிட்டனர். என்னை காப்பாற்றுங்கள்" என கண்ணீர் வீடியோ அனுப்பியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக செனகல்லில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லி உள்ளார்கள்.. தூதரக அதிகாரிகள், செனகல் போலீசாரின் உதவியுடன், 2 நாட்களுக்கு முன்பு, நந்திதாவை விபச்சார கும்பலிடம் இருந்து மீட்டனர். நந்திதா இப்போது பாதுகாப்பாக, தூதரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளார். விரைவில் அவர் இந்தியா அழைத்து வரப்பட உள்ளார்.

பெற்றோரிடம் விசாரணை

இப்போது குட்டு அம்பலப்பட்டுவிட்டதால் பெற்றோர் இருவருமே போலீசாரிடம் வசமாக சிக்கி உள்ளார்.. அவர்களிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மகள் இந்தியா திரும்பியதும், அவரிடம் வாக்குமூலம் பெற்று பெற்றோரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பெற்றோரே பணத்திற்காகத் தங்கள் சொந்த மகளை வெளிநாட்டில் விற்ற இந்தச் சம்பவம், அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது....!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+