கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பேரம்! விஜய்யை வழக்கில் சேர்க்கனும்! ஆளுநரை சந்தித்த பின் உதயநிதி பேச்சு
சென்னை: பெண் ஐஏஎஸ் அதிகாரி கொடுத்த புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்ற ஆளுநரிடம் கோரியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை கிண்டியில் ஆளுநர் அர்லேகரை சந்தித்த பின் பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், தலைமை செயலாளர் பேரம் பேசியுள்ளார். எம்.எல்.ஏவை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில்தான் தலைமை செயலாளர் ஈடுபட்டு இருக்கிறார். அதனால், அவரையும், முதல்வர் விஜய்யையும் குற்றவாளிகள் பட்டியிலில் சேர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

குற்றவாளிகள் பக்கத்தில் முதல்வர்
தமிழக ஆளுநர் அர்லேகரை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். கள்ளக்குறிச்சியில் பெண் அதிகாரிக்கு தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி குற்றசாட்டு தொடர்பாக அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆளுநர் அர்லேகரை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
முதல்வர் விஜய் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்காமல் குற்றவாளிகள் பக்கத்தில் சொகுசாக படுத்து தூங்கி கொண்டு இருக்கிறார். சட்டம் ஒழுங்கு, ஐஏஎஸ் அதிகாரி நலன் உள்ளிட்ட துறையும் டம்மி முதல்வரிடம்தான் உள்ளது. இந்த முதல்வர் தொடர்ந்து குற்றவாளிகள் பக்கத்தில் நிற்பதால்தான் எந்த ஆக்ஷனும் எடுக்காததால்தான், தொடர்ந்து இந்த மாதிரி குற்றங்கள் அதிகப்படியாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
தலைமை செயலாளர் ஏன் மூடி மறைத்தார்
இதைஎல்லாம் சொல்வதற்காகத்தான் இன்று கவர்னரை பார்த்து இருக்கிறோம். முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்து இருக்கிறோம். எங்களுக்கு இந்த ஆட்சி மீது நம்பிக்கை இல்லை. கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறோம்.
ஏனென்றால் தலைமை செயலாளர் 116 நாட்களாக இந்த குற்றத்தை மறைப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் இந்த அரசும் தலைமை செயலாளரும் முதல்வரும் செய்து இருக்கிறார்கள். நான் நேற்று கேட்ட அதே கேள்விதான். ஜூலை 31 ஆம் தேதியே தலைமை செயலாளரிடம் கலெக்டர் புகார் கொடுத்துள்ளார். எனவே தலைமை செயலாளருக்கு எல்லாமே தெரியும். தலைமை செயலாளர் ஏன் இதை மூடி மறைத்தார்.
முதல்வர், அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும்
இதை முதல்வர் பார்வைக்கு எடுத்து சென்றாரா? இல்லையா? எடுத்துட்டு போகாவிட்டால் இது தலைமை செயலாளருடைய தவறு. எடுத்துட்டு போயும் முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த குற்றத்திற்கு முதல்வரும் உடைந்தை. தலைமை செயலாளர் பேரம் பேசியுள்ளார். எம்.எல்.ஏவை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில்தான் தலைமை செயலாளர் ஈடுபட்டு இருக்கிறார்.
அதனால், அவரை குற்றவாளிகள் பட்டியிலில் சேர்க்க வேண்டும் என்று நேற்று சொல்லியிருக்கிறோம். முதல்வரையும் இதில் சேர்க்க வேண்டும். கடந்த ஒரு மாதகாலமாக இப்படிப்பட்ட ஒரு சம்பவமே சொன்ன அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆட்சி அமைந்து 6 மாதத்தில் சுமார் 700 படுகொலைகள் நடைபெற்றுள்ளது.
தீபாவளி பரிசு கொடுக்கிறார்
குறிப்பாக ஆளும் கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். குற்றம் செய்தவர்கள் 80 சதவீதம் பேர் தவெகவில்தான் உள்ளனர். கலெக்டருக்கே இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. குற்றவாளியை கூப்பிட்டு திட்டுவார், கண்டிப்பார் என்று பார்த்தால் அனைத்து எம்.எல்.ஏக்களையும் வரவழைத்து தீபாவளி பரிசு பொருட்கள் கொடுத்துள்ளார்.
துணை சபாநாயகர் ரவிசங்கர் மனு கொடுக்க வந்தவரை அடித்த வீடியோ வைரல் ஆனது. இந்த ஆட்சி அமைந்த பிறகு பெண் குழந்தைகள் காணாமல் போறது, தினமும் வருகிற செய்தியாக வந்து கொண்டு இருக்கிறது. போன மாதத்தில் மட்டும் 10 குழந்தைகள் காணமால் போயுள்ளது. செஞ்சியில் பெண் குழந்தை மாயமாகி 45 நட்கள் ஆகியுள்ளது. இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதான் இந்த ஆட்சியினுடைய லட்சணம். இந்த ஆட்சி அமைந்து 6 மாதத்தில் 9 காவல் நிலைய மரணம் நடைபெற்றுள்ளது.. என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
