வால்பாறை (தனி) திமுக எம்எல்ஏ சுதாகர் கிறிஸ்துவரா? ஐகோர்ட்டில் ஆதாரங்களை தாக்கல் செய்த மனுதாரர்!
சென்னை: வால்பாறை தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள திமுக எம்எல்ஏ சுதாகர், கிறிஸ்துவர் என்பதற்கான ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து விசாரணையை டிச.18-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வால்பாறை தனித் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட குட்டி என்ற சுதாகர் வெற்றி பெற்றதை எதிர்த்து, அவரை எதிர்த்து தவெக சார்பில் போட்டியிட்ட ஸ்ரீதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

'கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வரும் திமுக வேட்பாளரான சுதாகர், தன்னை இந்து பட்டியலினத்தவர் என பொய்யான சாதிச் சான்றிதழ் வழங்கி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். சுதாகர் கிறிஸ்துவ தேவாலயத்தில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டவர். அவரது தந்தை மறைந்த ஆரோக்கியத்தின் உடல் கிறிஸ்துவ தேவாலய மயானத்தில் கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்துவ மதத்தை தீவிரமாக பின்பற்றும் ஒருவர் இந்து பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித் தொகுதியில் பொய்யான சாதிச் சான்றிதழை சமர்ப்பித்து தேர்தலில் வெற்றி பெற்று இருப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது.
எனவே, வால்பாறை திமுக வேட்பாளர் சுதாகரின் சாதிச் சான்றிதழ் விவரங்களை சரிபார்க்க தேர்தல் ஆணையம் மற்றும் மாநில சான்றிதழ் சரிபார்ப்புக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன் சுதாகர் வால்பாறை தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்' என மனுவில் கோரியிருந்தார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அளவிலான சான்றிதழ் சரிபார்ப்புக் குழு ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வெண்ணிலா, 'கிறிஸ்துவரான திமுக எம்எல்ஏ சுதாகர், சிஎஸ்ஐ தேவாலயத்தில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துள்ளார். அவரது தந்தையின் உடலும் அதே தேவாலய மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
வால்பாறை சிறுகுன்றா சிஎஸ்ஐ தேவாலயத்தில், சுதாகர் சந்தா செலுத்தி உறுப்பினராக உள்ளார்' என்று கூறி அதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்தார். அவற்றைப் பரிசீலித்த நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 18 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

Click it and Unblock the Notifications