"நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க"! தேவாரம், திருவாசகம் தெரியாதா? அர்ச்சகரிடம் கேட்ட வைகோ!

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: தேவாரம் தெரியாதா? திருவாசகம் தெரியாதா என தஞ்சை பெரிய கோவிலில் (பெருவுடையார் கோயில்) அர்ச்சகரிடம் கேள்வி எழுப்பிய மதிமுக பொதுச் செயலாளர் சிவபுராணம் பாடி வழிபட்டார். பெருவுடையார் சன்னதியில் மண்டியிட்டு வழிபாடு நடத்தினார்.

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தர மறுத்து மேகதாது அணை கட்ட முயற்சி செய்து வரும் கர்நாடக அரசை கண்டித்து மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறுகிறது.

Vaiko

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வைகோ தஞ்சாவூருக்கு வருகை தந்தார். அவர் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றார். அங்கு அவர் பெருவுடையார் சன்னதியில் மண்டியிட்டு அமர்ந்து சுவாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து வைகோவின் நட்சத்திரம், ராசியை அவருடன் வந்தவர் சொல்லி அர்ச்சனை செய்யுமாறு அர்ச்சகரிடம் சொன்னார். அப்போது அர்ச்சகர் ஒரு மந்திரத்தை சொன்ன போது வைகோ, "தேவாரம் , திருவாசகம் சொல்ல தெரியாதா?" என அவரிடம் கேட்டார்.

அதற்கு அந்த அர்ச்சகர், சிரித்தபடியே, "தெரியும் சார்" என்றார். உடனே வைகோ சிவபுராணத்தை சொன்னார்.

"நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க!" என பாடினார். வைகோ பாடியதை கேட்ட பக்தர்கள் ஆச்சரியமடைந்தனர்.

இதையடுத்து அர்ச்சகர், "என் நாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என அர்ச்சன செய்து தீபாராதனை காட்டினார். சிவாச்சாரியார் காட்டிய ஆரத்தியை வைகோ தொட்டு கண்களில் ஒத்திக் கொண்டார்.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் பெரிய கோயில் என்றும் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது உலக புகழ்பெற்ற சிவன் கோயிலாகும். இதன் கோபுரத்தின் நிழல் தரையில் விழாத வண்ணம் கட்டடப்பட்டது தமிழர்களின் கட்டடக் கலைக்கு ஒரு சான்றாகும். காவிரி ஆற்று படுகையின் தொடக்க பகுதியில் இது அமைந்துள்ளது.

இந்த கோயில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இங்குள்ள நந்தி சிலை ஒரே கல்லிலாலானது. இதன் எடை 20 டன் ஆகும். இங்கு நந்தி மண்டபம், சுப்பிரமணிய கோயில், அம்மன் சன்னதி உள்ளிட்டவை உள்ளன. பெருவுடையார் , பெரிய நாயகி தாயார் உள்ளனர். வாராகி அம்மனுக்கும் தனி சன்னதி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+