பிரிந்துபோன மனைவி.. பெண்களிடம் ஆபாச சைகை காட்டி அத்துமீறிய நபரின் காலிலேயே சுட்ட போலீஸ்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கருத்துவேறுபாட்டால் பெங்களூரில் தங்கும் விடுதிகளில் தங்கியிருக்கும் பெண்களை குறிவைத்து ஆபாச சைகை காட்டுவதும், அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது, செல்போன்களை பறித்து செல்வது போன்ற தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த நபருக்கு இன்று போலீசார் மறக்க முடியாத தண்டனையை கொடுத்தனர். அந்த நபரின் காலிலேயே துப்பாக்கியால் சுட்டுபிடித்தனர்.

man-accused-of-assaulting-and-flashed-women-at-bengaluru-pgs-shot-by-police-during-arrest

பெங்களூர் எலகங்கா மற்றும் உன்சேமாரனஹள்ளி அருகே உள்ள சிக்கஜாலா பகுதிகளில் நேற்று அதிகாலையில் 3 இடங்களில் பெண்களிடம் ஒருவர் தவறாக நடந்து கொண்டார். பெண்களிடம் ஆபாசமாக சைகயை காட்டியதோடு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இன்னொரு இடத்தில் பெண்ணிடம் இருந்த செல்போனைபறித்து சென்றார்.

இதுபற்றி புகாரின் பேரில் பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தனித்தனியாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. குற்றம்செய்த நபரை கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் சிக்கலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜுன் தலைமையிலான போலீசார் தரகூனசே என்ற இடத்தில் உள்ள டெர்ரா ஃபார்ம் அருகே சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்ற நபரை போலீசார் அழைத்தனர். ஆனால் அந்த நபர் அங்கிருந்து ஓடினார்.

பிடிக்க சென்ற போலீசாரை தாக்கினார். இதனால் இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜுன் பாதுகாப்பு கருதி தனது துப்பாக்கியை எடுத்து அந்த நபரை சுட்டார். இதில் அவரது காலில் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் அந்த நபரின் பெயர் பெட்டா நரேஷ் என்பதும் ஆந்திர மாநிலம் அன்னமய்யமா மாவட்டத்தில் உள்ள மதனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் தனியாக வாழ்க்கை வாழ்ந்து வந்த நரேஷ், பெண்களிடம் அத்துமீறி நடந்து கொள்ள தொடங்கினார்.

அதிகாலை நேரத்தில் வீடு மற்றும் தங்கும் விடுதிக்கு வெளியே தனியாக நிற்கும் பெண்கள் தான் இவரது டார்க்கெட்.அந்த பெண்களை பார்த்தவுடன் அவர்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபடுவது, அந்தரங்க உறுப்பை காட்டுவது, செல்போன்களை பறித்து செல்வது போன்ற தவறுகளை செய்து வந்துள்ளார்.இவர் தான் உன்சேமாரனஹள்ளி மற்றும் எலகங்காவில் நேற்று அதிகாலையில் 3 இடங்களில் பெண்களிடம் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இவர் மீது பெங்களூர் மட்டுமின்றி அவரது சொந்த மாவட்டமான அன்னமய்யா மாவட்டத்திலும் வழக்குகள் பதிவாகி உள்ளது தெரியவந்தது. அதுமட்டுமின்றி பாலியல் வழக்கில் சமீபத்தில் கைதான பெட்டா நரேஷ் கடந்த 8 மாதங்களாக சிறையில் இருந்தார். அதன்பிறகு கடந்த 8 நாளுக்க மன்பு தான் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த நிலையில் மீண்டும் பெண்களை சீண்டி போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுபற்றி பெங்களூர் வடகிழக்கு மண்டல துணை காவல் ஆணையர் மிதுன் குமார் கூறுகையி்ல, ''கைதான நரேஷ் மீது இதுவரை மொத்தம் 15 வழக்குகள் பதிவாகி உள்ளது. கர்நாடகா, ஆந்திராவில் இந்த வழக்ககள் பதிவாகி உள்ளது. எல்லா வழக்குகளுமே பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது, கொள்ளையடித்தது தொடர்பானதாக உள்ளது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+