நடத்தையில் சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த தண்டனை.. சோகத்தில் பெங்களூர்
பெங்களூர்: பெங்களூர் தங்கும் விடுதியில் கேரளாவை சேர்ந்த காதல் ஜோடிக்கு இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக ஆத்திரமடைந்த காதலன், காதலியை குத்தியால் குத்தி கொன்ற சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது.

கேரளாவின் கொல்லம் மாவட்டம் நீலேஷ்வர் பகுதியை சேர்ந்தவர் கோகுல் கிருஷ்ணா (வயது 23). அதேபோல் கேரளாவின் அடூரை சேர்ந்தவர் கங்கா (22). இவர்கள் 2 பேரும் பெங்களூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்தனர்.
கங்காவிற்கு, கிருஷ்ணா சீனியர் ஆவார். ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஊர்விட்டு ஊர் வந்து ஒரே கல்லூரியில் படிப்பது உள்ளிட்டவற்றால் இருவருக்கும் இடையே கல்லூரி காலத்திலேயே பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் காதலாக மாறியது. தற்போது இருவரும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டனர். இதனால் அவர்கள் பெங்களூரில் வேலை தேடி வந்தனர். நேற்று முன்தினம் இருவரும் கேரளாவில் இருந்து வந்து காட்டன்பேட்டையில் .ள்ள தனியார் விடுதியில் தங்கினர். நேற்று காலையில் திடீரென்று அவர்களுக்குள் பிரசசனை ஏற்பட்டது.
இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். அப்போது ஆத்திரமடைந்த கோகுல் கிருஷ்ணா, கத்தியை எடுத்து கங்காவை குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனடியாக விடுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாககூறினர்.
இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுல் கிருஷ்ணாவை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் ''கோகுல் கிருஷ்ணா - கங்கா இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.இவர்கள் வேலை தேடி பெங்களூர் வந்தனர். கங்காவின் நடத்தையில் கோகுல் கிருஷ்ணாவிற்கு சந்தேகம் எழுந்தது. இந்த சந்தேகத்தால் ஏற்பட்ட தகராறில் கோகுல் கிருஷ்ணா, காதலி கங்காவை குத்தி கொன்றுள்ளார்'' என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் கங்காவை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கோகுல் கிருஷ்ணா முன்கூட்டியே கத்தியை வாங்கி கொண்டு வந்தாரா? இல்லாவிட்டால் விடுதி அறையில் கத்தி இருந்ததா? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
