Thiruparankundram: யார் அந்த சார்? அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட Political Boss-ஐ கண்டு பிடிக்கனும்! சுப்ரீம் கோர்ட் அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகள் தங்களது பொலிடிக்கல் பாஸ் பேச்சைக் கேட்டு செயல்பட்டு இருக்கின்றனர். அது தொடர்பான அதிகாரிகளின் தொலைபேசி அழைப்பு விவரங்கள் ( சிடிஆர் ), மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் உள்ளிட்டவை அடங்கிய பிரமாணப் பத்திரத்தை 15ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலருக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும், ஆங்கிலேயர் ஆட்சியில் தான் இன்று நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டதாக கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

Supreme Court Thiruparankundram

அப்போது தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் திமுக ஆட்சியில் தீபம் ஏற்றப்படவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தார்.

அதற்கு பிறகு தமிழக அரசு உத்தரவை நிறைவேற்ற வில்லை என எதிராக சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை அடுத்து தீபத்தூணில் தீபம் ஏற்ற கடந்த ஜனவரி 6ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பாஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

கடந்த 20ஆம் தேதி இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்த நீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்பின் விரிவான அம்சங்களை குறிப்பிட்டு இடைக்கால தடை விதித்த போதிலும் 24 ஆம் தேதி கார்த்திகை தீபத்தன்று ஒருமுறை மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற இடைக்கால அனுமதி வழங்கியது. ஆனால் 24 ஆம் தேதியும் தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கமாக உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்படும் நிலையில் அதே இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது.

இதனையடுத்து தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அரவிந்த் குமார், விபுல் பாஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழக அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திருப்பரங்குன்றம் மலைக்கோவில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற வேண்டும் எனவும், மலையில் முழு பாதுகாப்பையும் சிஆர்பிஎப் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும் தர்காவில் இருந்து 50 மீட்டர் தொலைவு வரை கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தர்கள் அனைவரும் தீபம் ஏற்றலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி இன்று தீபத்தூண் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீபம் ஏற்றப்பட இருக்கும் நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பலத்த போலீஸ் பாதுகாப்பும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்,

தற்போது தீபம் ஏற்றுவதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த நிலையில் அவமதிப்பு வழக்கின் இன்றைய விசாரணையின் போது பல முக்கிய கருத்துகளை நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். அதில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பை அதிகாரிகள் செயல்படுத்தாமல் விட்டுவிட்டனர்.

தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள் தங்களின் பொலிட்டிக்கல் பாஸ் பேச்சைக் கேட்டு செயல்பட்டுள்ளார்கள். குறிப்பிட்ட நாளில் அந்த அதிகாரிகள் யார் யாரிடம் பேசினார்கள் என்பது தொடர்பான தொலைபேசி அழைப்பு விபரங்கள், மின்னஞ்சல்கள், குறுந் தகவல்கள் ஆகியவை அடங்கிய பிரமாண பத்திரத்தை 15ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், 24ஆம் தேதி தீபம் ஏற்றும் நிகழ்வுக்கு முன் அதிகாரிகள் யார் யாரை தொடர்பு கொண்டார்கள் என்ற விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறச் சொல்லி உத்தரவிட்ட அந்த பொலிட்டிக்கல் பாஸை கண்டுபிடிக்க வேண்டிய நேரம் இது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+