கொளத்தூர் சங்கீதா வீட்டில் வெடித்த சபரிமலை விவகாரம்.. கணவர் வெளியே சென்றதுமே நடந்த கொடுமை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கொளத்தூரில் 26 வயது இளம்பெண் ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்... கணவருடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனைகள்தான் இந்த முடிவுக்கு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக சொல்லி, அவரது பெற்றோர் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர். என்ன நடந்தது இளம்பெண்ணுக்கு?

கொளத்தூர் லட்சுமிபுரம் வஉசி தெருவில் வசித்து வந்தவர் சங்கீதா. இவருக்கு வயது 26. சந்தோஷ் என்பவரை காதலித்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். கல்யாணமாகி இத்தனை ஆண்டுகள் ஆகியும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

Chennai Kolathur Sabarimala Controversy

கொளத்தூர் சங்கீதா

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு சபரிமலைக்கு மாலை அணியப்போவதாக சந்தோஷ் கூறியுள்ளார். இதற்கு சங்கீதா எதிர்ப்பு தெரிவித்ததால், தம்பதியிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் அவரவர் வேலையை கவனிக்க சென்றுள்ளனர்.

நேற்று காலை 6 மணிக்கு சந்தோஷ் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். வீட்டில் சங்கீதா மட்டும் இருந்துள்ளார்... கணவர் வேலைக்கு சென்றதுமே, சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்..

வேலை முடிந்து காலை 8,30 மணிக்கு வீட்டுக்கு திரும்பிய சந்தோஷ், மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே அவரை கீழே இறக்கி பெரியார் நகர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், டாக்டர்கள் பரிசோதித்தபோது சங்கீதா ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

சென்னை போலீஸ்

இதுகுறித்து தகவல் அறிந்த புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். சங்கீதாவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சங்கீதாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் மட்டுமே ஆவதால், அவரது மரணம் குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, சங்கீதாவின் உடல் இறுதிச்சடங்குக்காக வியாசர்பாடி பி.கல்யாணபுரத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் பரமேஸ்வரி கூறியுள்ளார்.

சாலை மறியல் - டிராபிக்

இதையடுத்து உறவினர்களுடன் சேர்ந்து அவர் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் சாலையில் மறியலில் ஈடுபட்டார். மாலை நேரத்தில் இந்த போராட்டத்தில், சங்கீதாவின் கணவர் சந்தோஷ் மற்றும் அவரது தாயை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். அதற்குள் தகவலறிந்து வந்த வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று சமாதானப்படுத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

சங்கீதாவின் மரணம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+