திராவிட இயக்கம் காத்து வந்த மாநில உரிமைகளை.. எரித்துச் சாம்பலாக்கிவிட்டது தவெக அரசு - கனிமொழி எம்பி
சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இன்று திருப்பரங்குன்றத்தில் தூணில் தீபம் ஏற்ப்பட்டது. இந்நிலையில், "திராவிட இயக்கம் தொடர்ந்து காத்து வந்த மாநில உரிமைகளை, இன்று எரித்துச் சாம்பலாக்கி இருக்கிறது தவெக அரசு" என திமுக எம்பி கனிமொழி விமர்சித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது x பக்கத்தில், "பேரறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் திராவிட இயக்கம் தொடர்ந்து காத்து வந்த மாநில உரிமைகளை, இன்று எரித்துச் சாம்பலாக்கி இருக்கிறது தவெக அரசு" என்று பதிவிட்டிருக்கிறார்.

திருப்பரங்குன்றத்தில் தீபமும் திமுகவும்
தீப விவகாரம் திமுக ஆட்சியில்தான் தொடங்கியது. இந்துத்துவா அமைப்பை சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர், கோயில் நிர்வாகத்திடம்.. திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் தர்கா அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள கல் தூணை தீப தூண் என்றும், அதில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்றும் முறையிடுகிறார். கோயில் நிர்வாகம் மறுத்துவிட.. அவர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடுகிறார். வழக்கு விசாரணை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வருகிறது. நீதிபதி, ராம ரவிக்குமார் கேட்டும் இடத்தில் தீபம் ஏற்ற உத்தரவிடுகிறார்.
ஆனால், அப்போதைய திமுக அரசு தீபம் ஏற்றவில்லை. சரி கார்த்திகை தீபம் போனால் என்ன? அதற்கு அடுத்த நாட்களில் தீபம் ஏற்ற உத்தரவிடுகிறார். ஆனாலும் தீபம் ஏற்றப்படவில்லை. இதையடுத்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்திலும், அதை தொடர்ந்து உச்சநீதமன்றத்திலும் மேல் முறையீடு செய்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு கொடுத்த உத்தரவின் அடிப்படையில் இன்று, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
