வாரணாசியில் இன்று தொடங்கும் காசி தமிழ் சங்கமம் 5.0.. மக்களை வரவேற்று பிரதமர் மோடி ட்வீட்

Subscribe to Oneindia Tamil

வாரணாசி: தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையிலான பாரம்பரிய, கலாச்சார உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், 5வது காசி தமிழ் சங்கமம் இன்று தொடங்குகிறது. டிசம்பர் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கு இந்தாண்டு கருப்பொருளாக திருக்குறள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து சுமார் 1,400 பேர் பங்கேற்க உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள 1,000 உயர்கல்வி நிறுவனங்களிலும் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையிலான கலாச்சார உறவை வலுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் காசி தமிழ் சங்கம் நடத்தப்படுகிறது. அதன்படி இன்றைய தினம் 5வது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. 'திருக்குறள் பயில்வோம்' என்பதே இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக உள்ளது. அதன் அடிப்படையிலேயே காசி தமிழ் சங்கம நிகழ்வு நடைபெறுகிறது.

Kashi Tamil Sangamam Thirukkural Narendra Modi

காசி தமிழ் சங்கமம்

திருக்குறளில் இடம்பெற்றுள்ள அறம், வாழ்வியல் நெறிகள், தத்துவ கருத்துகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்வதுடன், தமிழ் மற்றும் காசிக்கு இடையிலான மொழி, கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதும் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

இதற்காக தமிழ்நாட்டில் இருந்து சுமார் 1,400 பேர் வாரணாசிக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். மேலும், இந்தியா முழுவதும் உள்ள 1,000 உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதன் மூலம் திருக்குறளின் கருத்துகளை வகுப்பறைகள், கல்லூரிகள் வழியாக மக்களிடம் எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

5வது ஆண்டு

காசி தமிழ் சங்கமம் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மத்திய கல்வி அமைச்சகம், ஐஐடி மெட்ராஸ், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் உத்தர பிரதேச அரசு ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. இதற்கு முன்பு நடந்த 4 காசி தமிழ் சங்கம நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடந்த நிலையில், இப்போது 5 காசி தமிழ் சங்கமம் நடக்கிறது.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "காசி தமிழ்ச் சங்கமம் 5.0 இன்று தொடங்கியுள்ளதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்! தமிழ்நாட்டிலிருந்தும், நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் அமரத்துவமிக்க காசி நகரத்திற்கு வருகைதரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

திருக்குறள் பயில்வோம்

இந்த ஆண்டு சங்கமத்தின் கருப்பொருளான 'திருக்குறள் பயில்வோம்' என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. மானிட வாழ்வின் பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்தாழமிக்க வழிகாட்டுதல்களை திருவள்ளுவப் பெருந்தகையின் ஞானம் வழங்குகிறது. 10 வெளிநாட்டு மொழிகள் உட்பட 50 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது அற்புதமானது. திருவள்ளுவப் பெருந்தகையின் சிந்தனைகள், இளைஞர்களிடையே இன்னும் பரவலாகச் சென்றடைய இதுபோன்ற முன்முயற்சிகள் வழிவகுக்கட்டும்.

தொடங்கிய சில ஆண்டுகளிலேயே, 'காசி தமிழ்ச் சங்கமம்' கலாச்சார, அறிவுசார் பரிமாற்றங்களுக்கான ஒரு சிறப்புமிக்க தளமாகப் பரிணமித்துள்ளது. அதே வேளையில் 'உன்னத பாரதம்' என்ற ஒருமைப்பாட்டுணர்வும் இந்த சங்கமத்தால் வலிமையடைந்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+