ரூ.60,000 கோடி சொத்து.. "என்னை முட்டாளாக்கிவிட்டார்.." ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோவின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு குறித்து அவரது முன்னாள் மனைவி பிரமிளா சீனிவாசன் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். அதாவது வேம்பு தனக்கு தெரியாமலேயே நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குகளை குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றியதாக அவரது முன்னாள் மனைவி பிரமிளா சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவின் டாப் சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ (Zoho). இதன் இணை நிறுவனராக ஸ்ரீதர் வேம்பு இருக்கிறார். 2019ல் இந்தியா திரும்பிய ஸ்ரீதர் வேம்பு, 2021ல் அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் மனைவி பிரமிளா சீனிவாசனிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். 2023ல் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

Sridhar Vembu zoho India

பிரமிளா

இருப்பினும், சொத்து பங்கீடு தொடர்பான சட்ட போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. சுமார் 6.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஜோஹோ நிறுவனத்தின் சொத்துகளை பிரிப்பது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்து வரும் விவாகரத்து வழக்கு தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2019ல் ஸ்ரீதர் வேம்பு இந்தியா வந்தபோது, தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவே அவர் இந்த முடிவை எடுத்ததாக தான் நினைத்ததாக பிரமிளா தெரிவித்துள்ளார்.

ஆனால், அடுத்த ஆண்டே தங்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வரப்போகிறது என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து ஃபோர்ப்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ஸ்ரீதர் வேம்பு 2019ல் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, கலிபோர்னியாவில் தனது ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தையுடன் பிரமிளா தங்கியிருந்தார். இந்தியாவுக்கு வருமாறு ஸ்ரீதர் வேம்பு ஒருபோதும் தன்னை சொல்லவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

முட்டாளாக இருந்துள்ளேன்

அவர் மேலும், "அவர் இந்தியாவுக்கு செல்ல முடிவு செய்தபோது, வேலைக்காக செல்கிறார் என்றே நினைத்தேன். பிஸ்னஸாகவே இந்தியா செல்கிறார் என்று கருதினேன்.. எங்கள் திருமணத்தில் பிரச்சினை இருப்பதாக நான் அப்போது நினைக்கவில்லை. அதையெல்லாம் இப்போது நினைத்தால் முட்டாளாக இருந்திருக்கிறேன் என்றுதான் தோன்றுகிறது" என்று பிரமிளா தெரிவித்துள்ளார்.

வாட்அஸ்ப் மூலம்!

2020 அக்டோபரில் ஸ்ரீதர் வேம்பு விவாகரத்து வேண்டும் என்று வாட்ஸ்அப் மூலம் தெரிவித்ததாகவும், அது தனக்கு அதிர்ச்சியாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், 2019ல் இந்தியாவுக்கு வந்தபோது பிரமிளாவையும் குழந்தையையும் தன்னுடன் அழைத்து வர முயற்சி செய்ததாக ஸ்ரீதர் வேம்பு ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தம்பதி 1993ல் திருமணம் செய்துகொண்டனர். ஐஐடி மெட்ராஸில் படித்த ஸ்ரீதர் வேம்பு, பின்னர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1996ல் தனது இரண்டு சகோதரர்கள் மற்றும் நண்பர் டோனி தாமஸுடன் இணைந்து AdventNet என்ற நிறுவனத்தை தொடங்கினார். 2009ல் அது ஜோஹோ என பெயர் மாற்றப்பட்டது.

ரூ.64 ஆயிரம் கோடி

இந்த விவாகரத்து வழக்கில் முக்கிய பிரச்சினையாக இருப்பது ஜோஹோ நிறுவனத்தின் பங்குகள்தான். இப்போது ஜோஹோ நிறுவனத்தின் மதிப்பு 6.8 பில்லியன் டாலர். இதன் இந்திய மதிப்பு ₹63,212.80 கோடியாகும். இந்த ஜோஹோ நிறுவனத்தில் ஸ்ரீதர் வேம்புவின் குடும்பத்தினருக்கு சொந்தமாக சுமார் 6 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், ஜோஹோவின் சிஇஓவாகவும் இணை நிறுவனராகவும் இருக்கும் ஸ்ரீதர் வேம்புவிடம் வெறும் 5 சதவீத பங்குகள் மட்டுமே உள்ளன. அதேநேரம் அவரது சகோதரி ராதா வேம்புவிடம் 47.8 சதவீதமும், சகோதரர் சேகரிடம் 35.2 சதவீதமும் உள்ளன. நண்பர் டோனி தாமஸிடம் 8 சதவீத பங்குகள் உள்ளன. பங்குகள் இதுபோல பிரிக்கப்பட்டது தனக்கு முதலில் தெரியாது என்றும் டோனி தாமஸ் சொல்லியே தனக்கு தெரிய வந்ததாக பிரமிளா கூறியுள்ளார்.

பொதுவாக சொத்துகள்

ஸ்ரீதர் வேம்புவிடம் 5 சதவீத பங்குகள் இருப்பதால், விவகாரத்தின்போது தனக்கு 2.5 சதவீத பங்குகள் மட்டுமே கிடைக்கும் என்பது அப்போது தான் தெரிய வந்ததாகவும் பிரமிளா சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும், "அவர் ஜோஹோவின் இணை நிறுவனர். அப்படியிருக்க அவரிடம் ஏன் 5 சதவீத பங்குகள் மட்டுமே உள்ளன என்று கேட்டேன். அவர் அளித்த பதில் தெளிவாக இல்லை. அதனால் விவகாரத்து ஆவணங்களில் கையெழுத்திடாமல் வழக்கறிஞரை நியமித்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு தொடங்கி சிக்கலான பரிவர்த்தனைகள் மூலம் ஸ்ரீதர் வேம்பு தனது பங்குகளில் பெரும்பகுதியை சகோதரி மற்றும் உறவினர்களுக்கு மாற்றியதாகவும், அதற்கு ஈடாக எந்தவொரு பணத்தையும் பெறவில்லை என்றும் பிரமிளா குற்றம்சாட்டியுள்ளார். கலிபோர்னியா சட்டப்படி திருமண காலத்தில் ஈட்டப்பட்ட சொத்துகள், அவை எங்கு இருந்தாலும் இருவருக்கும் பொதுவான சொத்துகளாக கருதப்படும் என்பதால், இது குறித்து தன்னிடம் தெரிவிக்க வேண்டிய கடமை ஸ்ரீதர் வேம்புவுக்கு இருந்ததாக அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+