உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர்களை.. கைது செய்த தமிழக காவல்துறை!
திருச்சி: திருப்பரங்குன்றம் தீப விஷயத்தில், உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவுக்கு எதிராக திருச்சியில் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் குரல் கொடுத்து வருகின்றன. குறிப்பாக இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் உத்தரவுக்கு அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இப்படி இப்படி இருக்கையில், திருச்சியில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் அமைப்பு சார்பில் திருச்சி, பழைய பால்பண்ணை அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தமிழக போலீசார் கைது செய்திருக்கின்றனர். இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவும் திருப்பரங்குன்றத்தில் தீபமும்
திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்புகள் கோரிய தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு மீது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த நவ.20ம் தேதி உத்தரவை பிறப்பித்திருந்தது.
உத்தரவில், சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்கு இடைக்கால தடையை விதிப்பதாகவும், ஆனால், ஒரு முறைமட்டும் திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. ஆனால், தமிழக அரசு இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை. இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த அமர்வு, இன்று தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இன்று மாலை 5 மணி அளவில் தூணில் தீபம் ஏற்றப்பட்டது.


Click it and Unblock the Notifications
