தீபம் ஏற்றுவது உறுதியா? திருப்பரங்குன்றத்திற்கு இந்தியத் தொல்லியல் துறையின் ஏஎஸ்ஐ அதிகாரிகள் வருகை

Subscribe to Oneindia Tamil

மதுரை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் ஒரு தரப்பினராக உள்ள இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனம் , திருப்பரங்குன்றத்தை வந்தடைந்துள்ளது. தீபம் ஏற்றும் விவகாரத்தில் திருப்பரங்குன்றத்திற்கு இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனமான ஏஎஸ்ஐ அதிகாரிகள் வந்திருப்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் மத்திய அரசின் அதிகாரிகளான தொல்லியல் துறை அதிகாரிகள் வந்திருப்பதன் நோக்கம், வெறுமனே தீபம் ஏற்றுவதைப் பார்வையிடுவதற்கு கிடையாது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவைச் செயல்படுத்துவதில் ஏஎஸ்ஐக்கும் ஒரு குறிப்பிட்ட பங்கு வழங்கப்பட்டிருப்பது தான் காரணம் ஆகும்.

Archaeological Survey

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் 24-ந்தேதி ( இன்று) தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 20-ந்தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், கார்த்திகை தீபத்தை இந்து அமைப்புகள் குறிப்பிடும் தூணில் தீபம் ஏற்றிக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.

அதேபோல் திருப்பரங்குன்றம் கோயில் தேவஸ்தான நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே மலை உச்சிக்குச் சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இக்குழுவின் எண்ணிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியர், கோயில் செயல் அலுவலர், இந்திய தொல்லியல் துறை மற்றும் காவல் ஆணையருடன் ஆலோசித்து முடிவு செய்வார் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஆனால் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது.இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வராததால், 'திருப்பரங்குன்றம் தீபத் துாணில் தீபம் ஏற்ற வேண்டும்' என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து, மாநில அரசு செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த உத்தரவை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையும் இன்று எச்சரித்துள்ளது.

இந்த சூழலில் தான் மதுரை மாவட்ட ஆட்சியர், கோயில் செயல் அலுவலர், மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோருடன் ASI எனப்படும் இந்திய தொல்லியல் துறையும் தீபம் ஏற்றச் செல்லும் குழுவின் உறுப்பினர்களையும் எண்ணிக்கையையும் முடிவு செய்ய போகிறது. இவர்கள் தான் இன்றைக்கு யார் யார் தீபம் ஏற்ற மலையில் ஏற தீபம் ஏற்ற போகிறார்கள் என்பதை தீர்மானிக்க போகிறார்கள். அதற்காகவே திருப்பரங்குன்றத்திற்கு இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனமான ஏஎஸ்ஐ அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்.

தொல்லியல் துறை ஏஎஸ்ஐ அதிகாரிகளுக்கு இன்று மாலை என்ன வேலை

தீபம் ஏற்ற வேண்டிய தூண் என்று இந்து அமைப்புகளால் சுட்டிக்காட்டப்பட்ட இடம் மற்றும் அதன் சுற்றுப்புறத் தொல்லியல் தன்மையைப் பரிசீலிக்க வேண்டும். அடுத்ததாக தீபம் ஏற்றச் செல்லும் கோயில் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தொடர்பான ஏற்பாடுகள் விவகாரத்தில் மதுரை மாவட்ட கலெக்டருக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அதேநேரம் தொல்லியல் பாதுகாப்புப் பகுதிக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படாமல் அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும். புதிய கட்டுமானம், கட்டமைப்பு மாற்றம், அகழாய்வு போன்றவை நடைபெறாமல் இருப்பதையும், நீதிமன்ற உத்தரவு மீறப்படாமல் இருப்பதையும் தொல்லியல் துறை உறுதி செயய வேண்டும். எனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு நிறைவேற்றப்படுமா, திருப்பரங்குன்றத்தில் குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+