சுங்கச்சாவடிகளில் தெளிவாக தெரியாத பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு பல அபராதம்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: சுங்கச்சாவடிகளில் தடையற்ற சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்கும் நோக்கில், வாகனப் பதிவு எண்களை மறைப்பது, மாற்றுவது அல்லது சேதப்படுத்தப்பட்ட நம்பர் பிளேட் உபயோகிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் வாகன உரிமையாளர்களுக்கு அதிக அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டமிடடுள்ளது.

மாற்றப்பட்ட அல்லது தெளிவாகப் படிக்க முடியாத நம்பர் பிளேட் கொண்ட வாகனங்கள் கண்டறியப்பட்டால், வழக்கமான சுங்கக் கட்டணத்தைவிட 4 முதல் 8 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சுங்கக் கட்டணத்தைத் தவிர்க்கும் முயற்சிகளைத் தடுக்கும் வகையில் இந்தப் புதிய விதிமுறைகளை அரசு தயாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

toll plazas

தமிழ்நாட்டில் பரனூர், ஸ்ரீபெரும்புதூர், காரைப்பேட்டை-வாலாஜாபேட்டை பிரிவில் உள்ள சென்ன சமுத்திரம் என மூன்று சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டு, அதற்கு பதில் தனியாங்கி சுங்கச்சாவடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த சுங்கச்சாவடிகளில் கடக்கும் வாகனங்களிடம் கேமரா மூலம் தானாகவாவே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் ஒட்டாமல் வாகனங்கள் கடந்தாலோ அல்லது வாகனத்தில் பாஸ்டேக்கில் பணம் இல்லாத நிலையிலோ அல்லது நம்பர் பிளேட்டை மறைத்தோ சென்றால், வழக்கமான கட்டணத்தைப் போல இரு மடங்கு கட்டணம் தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல மடங்கு கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தனியாங்கி சுங்கச்சாவடிகளில் பயணிப்போருக்கு மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

* உங்கள் FASTag-ஐ விண்டோஸ்கிரீனில் சரியாகப் பொருத்தி, போதுமான பணம் இருப்புடன் செயல்பாட்டில் வைத்திருங்கள்.

* போதுமான பணம் இல்லாதிருந்தாலோ அல்லது செல்லாத ஃபாஸ்டேக் (FASTag) வைத்திருந்தாலோ, சுங்கக் கட்டணத்தைப் போல் இருமடங்கு தொகைக்கு மின்னணு நோட்டீஸ் அனுப்பப்படும்.

* மின்னணு அறிவிப்பு வெளியிடப்படும்போது, வாகனத்தின் ஃபாஸ்டேக் சேவைகள் இடைநிறுத்தப்படும்.

* [https://nhfeenotice.parivahan.gov.in](https://nhfeenotice.parivahan.gov.in) என்ற NIC தளத்தில் மின்னணு அபராத அறிவிப்புகளைப் பார்த்து பணம் செலுத்துங்கள்.

* 72 மணி நேரத்திற்குள் தொகை செலுத்தப்படாவிட்டால், உபயோகிப்பாளர் கட்டணம் வழக்கமான கட்டணத்தை விட இருமடங்கு வசூலிக்கப்படும்.

* உபயோகிப்பாளர், ஏதேனும் குறை இருப்பின், அதனை NIC போர்ட்டலிலும் தெரிவிக்கலாம்.

* மின்னணு நோட்டீஸ்களுக்கு கட்டணம் செலுத்தத் தவறினால், பொருந்தக்கூடிய வகையில், தடையில்லாச் சான்றிதழ் (NOC), உரிமை மாற்றம், தகுதிச் சான்றிதழ் மற்றும் தேசிய பெர்மிட் போன்ற தொடர்புடைய வாகனச் சேவைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட நேரிடலாம்.

* உங்கள் வாகனத்தில், பதிவு எண்ணை தெளிவாகவும் படிக்கக்கூடியதாகவும் உள்ள வகையில் தரப்படுத்தப்பட்ட நம்பர் பிளேட்டை (உயர் பாதுகாப்புப் பதிவு எண் பிளேட்) மட்டுமே பயன்படுத்துங்கள்."இவ்வாறு கூறிப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+