நடிகர் அர்ஜுன் புகார் வழக்கு விசாரணை.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன வார்த்தை.. அடுத்து என்ன நடக்கும்?
சென்னை: நடிகர் அர்ஜுன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு ஆஜரான நடிகரும், யூடியூபருமான பயில்வான் ரங்கநாதன் விசாரணை முடிந்து வெளியே வந்ததும் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதில் இந்த விவாகரத்தில் இப்போது மீண்டும் கவனத்தை திருப்பி இருக்கிறது. குறிப்பாக தன் மீதான புகார் குறித்து கேட்கப்பட்ட போது, "புகாரே ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு என்பது போலத்தான் கொடுத்திருக்கிறார்கள்" என்று பதில் இருக்கிறார்.
பயில்வான் ரங்கநாதன் விசாரணை
நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா குறித்து சோசியல் மீடியாவில் அவதூறான கருத்துக்கள் பகிரப்படுவதாக கூறி அர்ஜுன் காவல்துறையிடம் புகார் கொடுத்திருந்தார். தனது மகள், மது பழக்கத்திற்கு அடிமையாகி விட்டாள் என ஆதாரமற்ற, அவதூறான கருத்துக்கள் பரப்பப்படுவதாக கூறி அர்ஜுன் காவல்துறையினிடம் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

அர்ஜுன் புகாரின் விசாரணை
இந்த புகாரை தொடர்ந்து அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பற்றி மோசமாக பேசிய பயில்வான் ரங்கநாதனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிராம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணைக்கு பிறகு வெளியே வந்த அவர் தன் தரப்பு விளக்கத்தை செய்தியாளர்களிடம் சுருக்கமாக கூறியிருக்கிறார். ஆனால் போலீசார் என்னென்ன கேள்வி கேட்டார்கள், விசாரணையில் வேறென்ன தகவல் கிடைத்தன? என்பது குறித்து அவர் எதையும் சொல்லவில்லை.
செய்தியாளர்கள் கேள்வி
அவரிடம் செய்தியாளர்கள், "போலீசார் உங்ககிட்ட என்ன கேட்டாங்க" என்று கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர், "என்குயரி என்றால் எதுவும் வெளியில் சொல்ல முடியாது. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் அளித்தேன்" என்று சொல்லி இருக்கிறார். மீண்டும் விசாரணைக்கு அழைத்து இருக்கிறார்களா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "அது பற்றி எதுவும் சொல்ல முடியாது" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
பயில்வான் சொன்ன வார்த்தை
இதற்கிடையே பயில்வானிடம், "ஆதாரம் அற்ற குற்றச்சாட்டு நீங்க வைத்திருக்கிறீங்க என்று சொல்லப்பட்டு இருக்கிறதே, உங்களிடம் ஐஸ்வர்யா பற்றிய ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?" என்று கேள்வி கேட்டபோது, அதற்கு அவர், "புகாரே ஆதாரம் அற்ற குற்றச்சாட்டு என்பது போலத்தான் கொடுத்திருக்கிறார்கள்" என்று சொல்லிவிட்டே அங்கிருந்து கிளம்பி இருக்கிறார். ஏற்கனவே அர்ஜுன் கொடுத்த புகார் காரணமாக இந்த விவகாரம் பேசப்பட்டு வந்த நிலையில், இப்போது விசாரணைக்கு பிறகு பயில்வான் அளித்திருக்கும் பதிலும் கவனம் பெற்று இருக்கிறது. அடுத்த கட்டமாக போலீசார் மீண்டும் அவரை விசாரணைக்கு அழைக்கிறார்களா? இந்த புகார் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்பதுதான் இப்போது எதிர்பார்ப்பாக இருக்கிறது.




Click it and Unblock the Notifications
