"கடந்த முறை போல் தான் நடக்கிறது".. திருப்பரங்குன்றம் தீப வழக்கில் மதுரை கலெக்டருக்கு நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நாளான இன்று மதுரை முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆஜரானார். அப்போது உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அட்வைஸ் கூறியதோடு, அதனை செய்யாவிட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றி வார்னிங்கும் கொடுத்தார்.

thirupparankundram-deepam-judge-gr-swaminathan-gives-warning-to-the-madurai-collector

கார்த்திகை நாளான இன்று திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு இந்த உத்தரவை நிறைவேற்றுமா? என்பதில் சந்தேகம் உள்ளது.

ஏனென்றால் நேற்று இரவு 9 மணி முதல் நாளை காலை 10 மணி வரை திருப்பரங்குன்றம் உள்பட மதுரை மாவட்டம் முழுவதும் 163 பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவில் தடை உத்தரவு (முன்பு 144 தடை உத்தரவு என்று சொல்லப்படும்) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் இந்த தடை உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், சுமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா 12.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டார். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இதனால் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கடிந்து கொண்டார். மதியம் 1.15 மணிக்குள் ஆஜராக உத்தரவிட்டார். மதியம் 1.15 மணிக்கு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை காவல் ஆணையர் இனிகோ திவ்யன் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாவை அமர கூறினார். அறையில் அதிகமானவர்கள் இருந்ததால் ஒவ்வொருவராக பேச வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை தொடங்கினார். மனுதாரர் தரப்பில், ''திருப்பரங்குன்றம் உள்பட மாவட்டம் முழுவதும் பிஎன்எஸ்எஸ் 163ன்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக்கூடாது என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது'' என்று கூறினர்.

இதற்கு நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், ''மதுரை கலெக்டர் இளம் ஐஏஎஸ் அதகாரி. உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்வார் என்றால் துணிச்சலானவர் தான். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாவிட்டால் அவர் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்வார். உங்ளுக்கு ஏன் கவலை'' என்று கூறினார். இந்த வழக்கு தொடர்பாக துணை காவல் ஆணையர் இனிகோ திவ்யனும் ஆஜராகி இருந்தார்.

அப்போது, நீதிமன்றம் ''திருப்பரங்குன்றம் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளில் உயர்நீதிமன்றம் ஒருபோதும் தலையிடாது. உச்சநீதிமன்ற உத்தரவுகளை முறையாக நிறைவேற்ற வேண்டும். கடந்த ஆண்டு போலத்தான் இப்போதும் நடக்கிறது. கடந்த ஆண்டு தீபம் ஏற்றாமல் என்ன நடந்ததோ? அதுபோன்று தான் தற்பொழுதும் நடக்கிறது.

அப்போதும் துணை காவல் ஆணையராக இனிகோ திவ்யன் தான் இருந்தார். இப்போதும் அவர் தான் உள்ளார். பக்தர்களின் மத உரிமையை நிறைவேற்ற வேண்டும். இந்த முறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கடுமையாக இருக்கும்'' என்று வார்னிங்குடன் அறிவுரை வழங்கி வழக்கு விசாரணையை மாலை 4 மணிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+