நெல்லை அரசு மருத்துவனையில் மாணவனுக்கு வலது காலுக்கு பதில் இடது காலில் ஆபரேஷன்
நெல்லை: விபத்தில் சிக்கிய 9ம் வகுப்பு மாணவன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைச்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவனுக்கு அடிப்பட்டு இருந்த வலது காலுக்கு பதில் இடது காலில் டாக்டர்கள் ஆபரேஷன் செய்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில அளவிலான மருத்துவர்கள் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியில் வசிக்கும் ஷேக் அப்துல் சலாம் என்பவருடைய மகன் ரஹீமுக்கு 15 வயது ஆகிறது. ரஹீம் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அண்மையில் ரஹீம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். ரஹீமின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வலது கால் முட்டி பகுதியில் ஜவ்வு விலகியிருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. விரைவில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அதன்படி, நேற்று காலையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவ குழுவினர் ரஹீமை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்றுள்ளார்களாம்.
சில மணி நேரத்தில் ஆபரேஷன் முடிந்து ஸ்டெச்சரில் வைத்து ரஹீம் வெளியே அழைத்து வரப்பட்டுள்ளார். அவரை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் காயமடைந்த வலது காலுக்கு பதிலாக, நல்ல நிலையில் இருந்த இடது காலில் தவறுதலாக டாக்டர்கள் ஆபரேஷன் செய்தது தெரியவந்தது.
இதனால் பதற்றமடைந்த ரஹீமின் பெற்றோர், சம்பந்தப்பட்ட டாக்டர்களிடம் முறையிட்டனர். மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தும் உரிய பதில் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடது காலில் போடப்பட்டிருந்த கட்டுகளை மருத்துவ குழுவினர் அவசர அவசரமாக பிரித்தாக கூறப்படுறிது.
டாக்டர்களின் அலட்சியத்தால் தங்களுடைய மகனின் 2 கால்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாக பெற்றோர்கள் கதறிபடி குற்றம் சாட்டினர். தவறு செய்த டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முறையிட்டனர். இந்த விவகாரம் நேற்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெரிய சர்ச்சையாக மாறியது.
இதுபற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் செல்வராஜன் கூறுகையில், "மாணவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த மாநில அளவிலான மருத்துவர்கள் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவினர் இன்று நேரில் விசாரணை நடத்தி, அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களிடம் விளக்கம் கேட்க உள்ளனர். அதன் பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும்" என்றார்.




Click it and Unblock the Notifications
