சிறுமிகளிடம் ஆபாச செய்கை.. சிசிடிவியில் கிடைத்த ஆதாரம்! கும்கி பட நடிகருக்கு ஜெயில் தண்டனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு சில நடிகர்கள் சில படங்களில், ஒரு சில காட்சிகளில் வந்திருந்தாலும் அந்த நடிகரின் முகம் ரசிகர்களுக்கு நன்றாக நினைவில் இருக்கும். அப்படித்தான் கும்கி படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீஜித் ரவியும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். மலையாளத்தில் பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது ஒரு வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் மீண்டும் செய்திகளில் இடம் பிடித்திருக்கிறார். 2022 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்துக்கு இப்போதுதான் நீதிமன்றத்தில் தண்டனை கிடைத்திருக்கிறது.

நடிகர் மீது வழக்கு

திருச்சூரில் 2 சிறுமிகள் முன்பு ஆபாச செய்கை, பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் ஸ்ரீதர் ரவிக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் 50,000 அபராதம் விதித்து திருச்சூர் விரைவு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த செய்தி வெளியானதும் மலையாள சினிமா மட்டுமல்லாமல், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

இந்த வழக்கின் பின்னணியை பார்த்தால் சம்பவம் நடந்தது 2022 ஆம் ஆண்டு ஜூலை 4ம் தேதி. திருச்சூரில் உள்ள அய்யந்தோள் பகுதியில் எஸ்என் பார்க் அருகே 2 சிறுமிகள் இருந்தபோது காரில் வந்த ஒருவர் அவர்களிடம் ஆபாசமாக செய்கை செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அந்த சிறுமிகள் 10 மற்றும் 14 வயதுடையவர்கள் என்று கூறப்படுகிறது.

அந்த சிறுமிகள் சம்பவத்தை தங்களது பெற்றோரிடம் சொல்லி இருக்கிறார்கள். அதன் பிறகு பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்பகுதியில் இருந்த சிசிடிவிகள் காட்சிகள் மற்றும் சிறுமிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. சிசிடிவியில் அது நடிகர் ஸ்ரீஜித் ரவி என்று தெரிய வந்திருக்கிறது. இந்த வழக்கில் நடிகர் ஸ்ரீஜித் ரவி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார்.

Sreejith Ravi Kumki Malayalam Cinema

நீதிமன்றம் கொடுத்த தண்டனை

ஆனால் வழக்கு அத்துடன் முடிந்து விடவில்லை. விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றது. வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஸ்ரீஜித் ரவி தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இதை அடுத்து அவர் நீதிமன்றத்தையும் அணுகி இருந்தார். அந்த முயற்சியும் பயன் அளிக்காத நிலையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இந்த வழக்கில் மொத்தம் 21 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. இந்த நிலையில் நவம்பர் 23ஆம் தேதி திருச்சூர் விரைவு சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.

மலையாள சினிமாவில் ஹீரோவாகும் காமெடி நடிகர் சிவராமனின் மகன்.. உழைப்புக்கு கிடைத்த வெற்றி
சிறுமிகளிடம் பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் ஸ்ரீஜித் ரவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து, அவருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 50,000 அபராதமும் விதித்துள்ளது. அபராத தொகை வசூலிக்கப்பட்டால் அது பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவாகரத்தில் இன்னொரு அதிர்ச்சியான தகவலும் இருக்கிறது.

Sreejith Ravi Kumki Malayalam Cinema

ஏற்கனவே இதே புகார்

இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டு பாலகாட்டில் பள்ளி மாணவர்களிடம் இது போன்ற முறையில் நடந்து கொண்டதாக ஸ்ரீஜித் ரவி கைது செய்யப்பட்டு இருக்கிறார். அந்த வழக்கில் ஏற்பட்ட சர்ச்சையும் அப்போது மலையாள சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நடிகர் ஸ்ரீஜித் ரவி என்பவர் வேறு யாரும் இல்லை, மலையாள சினிமாவில் மூத்த நடிகரான டிஜி ரவியின் மகன். மலையாளத்தில் வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து வந்த அவர் 60க்கும் மேற்பட்ட படங்களின் நடித்திருக்கிறார். தமிழிலும் கும்கி, வேட்டை, மதயானை கூட்டம், ஆழி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

ஏற்கனவே கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு எம்எல்ஏ அனுப்பிய ஆபாச மெசேஜ் சர்ச்சை ஒரு பக்கம் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கும் சமயத்தில், சினிமாவில் வில்லனாக பார்த்த நடிகர் நிஜத்திலும் வில்லனாக இருந்திருக்கிறாரே? பச்ச குழந்தைகளுக்கு இப்படி பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறாரே? என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+