அத்துமீறிய கள்ளக்குறிச்சி எம்எல்ஏ! பெண் பாதுகாப்பு பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? கனிமொழி
சென்னை: பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச முதல்வர் விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது? என கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் நிர்மல் குமார், ராஜ்மோகன் எல்லாரும் இப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை. சமூக வலைத்தளத்தில் வரும் தகவல்களை வைத்து அரசியல் செய்வதாக கூறி வந்தனர். இப்போது அவர்கள் எல்லாரும் என்ன சொல்லப் போகிறார்கள். முதல்வர் விஜய் இப்போது என்ன செய்யப் போகிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
டிவிகே எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது பெண் ஐஏஎஸ் அதிகாரி புகார் கொடுத்துள்ள நிலையில், பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். ஆட்சியருக்கு கூட பாதுகாப்பு இல்லை, ஆட்சியராலேயே புகார் கொடுக்க முன் வர முடியாத நிலை தமிழகத்தில் இருப்பதாக கனிமொழி எம்பி கூறியுள்ளார்.

முதன் முதலாக இப்படியொரு சம்பவம் நடந்து இருக்கு என்று திமுக சார்பில் நான் பதிவு போட்டிருந்தேன். இந்த பிரச்சினையை நாங்கள் எழுப்பிய பிறகு மற்ற கட்சிகளும் கேள்வி கேட்டு இருந்தனர். ஆனால் ஆளும் அரசுத் தரப்பில் இப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை என கூறி வந்தனர்.
குறிப்பாக அமைச்சர் நிர்மல் குமார், ராஜ்மோகன் எல்லாரும் இப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை. சமூக வலைத்தளத்தில் வரும் தகவல்களை வைத்து அரசியல் செய்வதாக கூறி வந்தனர். இப்போது அவர்கள் எல்லாரும் என்ன செய்யப் போகிறார்கள். முதல்வர் விஜய் இப்போது என்ன செய்யப் போகிறார்.
தமிழ்நாட்டு பெண்களை காப்பாற்றப் போகிறேன் என்று சொல்லி ஆட்சி வந்த இவர் ஏன் இப்போது கூட வாய் திறக்காமல் அமைதியாக இருக்கிறார். கலெக்டருக்கு கூட இந்த தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஒரு கலெக்டரால் கூட கம்ப்ளைண்ட் பண்ண முடியல. பெண் ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு புகார் தெரிவிக்க கலெக்டருக்கே பயம் இருக்கும் அளவுக்கு தான் நிலைமை இருப்பது தெரியவருகிறது.
இத்தனை நாளாக இந்த அரசாங்கமே இல்லை.. இல்லை என சொல்லி வந்திருக்கிறார்கள். கடந்த ஜூலை மாதமே புகார் கொடுத்ததாக பெண் ஐஏஎஸ் அதிகாரி சொல்லியிருக்கிறார். ஆனால் இத்தனை நாட்களாக இவர்கள் ஏன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றத்திற்கு போன பிறகு தான் இப்போது வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் நீதிபதி இந்த சம்பவம் பற்றி பேசினாங்க. அப்போது அவர்களை விமர்சனம் செய்து பேசினார்கள். இன்னைக்கு நீதிமன்றமே தமிழக அரசை பார்த்து குற்றவாளிகளை பாதுக்காக்குறீங்களா என்று கேள்வி எழுப்பும் அவல நிலை தான் தமிழகத்தில் நடந்து இருக்கு. தேசிய மகளிர் ஆணையமும் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது. இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கையே இல்லை என்பதால் தான் நீதிமன்றம் இந்த உத்தரவுகளை எல்லாம் பிறப்பித்துள்ளது. இன்னும் அரசு யாரையும் காப்பாற்ற நடவடிக்கை எடுத்தால் நாங்கள் இதை விடமாட்டோம். என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
