மேஷ ராசிக்கு டிசம்பர் 5 முதல் பிரகாசமான மாற்றம்.. 10 மடங்கு தொழில் வளர்ச்சி.. எதிரிகள் துவம்சம்

Subscribe to Oneindia Tamil

Rahu ketu peyarchi 2026: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி வரும் டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. நிழல் கிரகங்களில் இந்தப் பெயர்ச்சியானது மேஷ ராசியின் வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம் ராசியினர் மிக முக்கியமான காலத்திற்குள் நுழைகிறார். வரும் டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சியாவதால், விபரீதமான வெற்றியைக் கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். வேலையில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் 10 மடங்கு உயர்வு ஏற்படும். முயற்சிகளில் வெற்றி பெறக்கூடிய அமைப்பு ஏற்படும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

rahu-ketu-peyarchi-2026-massive-career-growth-financial-gains-for-mesham-rasi

ராகுவால் ஜெயம்

உரிய அங்கீகாரம் கிடைக்கும். 10 ஆம் இடத்திற்கு ராகு வருதால் பெரும் வலிமையைப் பெறுவீர்கள். ஏற்றமதி, இறக்குமதி தொடர்பான விஷயங்களில் நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படும். எதிரிகள் கண்டிப்பாக இருப்பார்கள். எதிரிகளை ஜெயிக்கக்கூடிய வல்லமை, அதற்கான திட்டமிடலை ராகு கொடுக்கும். நிழலில் நடக்கும் பிரச்சனைகளைக் கண்டுபிடிக்கக்கூடிய திறமையைத் தரும்.

மாணவர்கள் கவனம்

உத்தியோகத்தில் வெற்றி, மிகப்பெரிய மாற்றம் வரக்கூடிய காலகட்டமாக இருக்கும். கேது 4 ஆம் இடத்தில் அமருவதால் படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் மாணவர்களுக்கு தடை, தாமங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நன்மை பயக்கும். 4 ஆம் இடம் என்பது சுக ஸ்தானம். வீடு, வாகனம், சொத்து, கட்டில் மெத்தை தொடர்பான பிரச்சனைகளை சரி செய்து மாற்றுவீர்கள்.

வெளியூர் யோகம்

நீர்நிலைகள் அருகில் இருக்கும் வீடுகளுக்கு சிறு சிறு பாதிப்புகள் வந்து போகும். தாய்க்கு நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சைனஸ், ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளும் நிலை ஏற்படும். சொந்த ஊரில் இருப்பவர்கள் வெளியூர் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். 4 ஆம் இடத்தில் சுக ஸ்தானம் கேது இருக்கும்போது ஊரை விட்டுப் போவது, அலைந்து திரிந்து வேலை செய்யும் அமைப்பு நன்மையைத் தரும்.

முன்னேற்றம்

தரையில் படுத்து உறங்குவது ஏற்றத்தைத் தரும். வீட்டில் சந்நியாசத்தைக் கடைப்பிடிப்பது நன்மை பயக்கும். பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். ஆனால், அதை அனுபவிக்க முடியாத சூழல் இருக்கும். எல்லா விஷயத்தையும் திறமையாக கையாளுவீர்கள். கால் முட்டி தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. மாமியாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

வழிபாடு

அரக்கன் போல வேலையை செய்வீர்கள். எதிரிகளை வெல்லும் அமைப்பு ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. பண வரவு அமோகமாக இருக்கும். சந்தோஷம் 75 சதவீதமும், பொருளாதார ஏற்றமும் 95 சதவீதமும் இருக்கும். விநாயகருக்கு தினந்தோறும் அல்லது திங்கள்கிழமை தோறும் அபிஷேகம் செய்வது, அருகம்புல் மாலையிடுவது ஏற்றத்தைத் தரும். மாணவர்கள் விநாயகரை வழிபட்டுவிட்டு தேர்வுக்குச் செல்வது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+