ஓவர்நைட்டில் 99.7% குறைந்த மருத்துவ செலவு! ரூ.9 கோடி செலவாகும் மருந்து.. இப்போ ரூ.2.5 லட்சம் மட்டுமே

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: குழந்தைக்கு அரிய வகை மரபணு நோய் பாதிப்பு ஏற்படும்போது அதற்கு பல கோடி ரூபாய் செலவழித்து சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும். இந்தியாவில் இதுபோன்ற சூழலை எதிர்கொண்ட பல குடும்பங்களுக்கு இப்போது நம்பிக்கை அளிக்கும் செய்தி கிடைத்துள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ.9 கோடி வரை செலவாகும் மருந்து, இனி வெறும் ரூ.2.5 லட்சத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் குழந்தைகளை பெற்று வளர்ப்பது என்பதே ஒரு மிக பெரிய சவாலாக உள்ளது. அப்படியிருக்க குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே மோசமான நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் அது நிச்சயம் அனைத்து பெற்றோரையும் உடைத்துவிடும். இப்போது அப்படிதான் ஆங்காங்கே சிறு குழந்தைகளுக்கும் அரிய வகை மரபணு நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

Medicine India

அரிய மரபணு நோய்

இதுபோன்ற பாதிப்பு ஏற்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க பல கோடி ரூபாய் வரை செலவாகும். குறிப்பாக ஒரு மருந்துக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.9 கோடி வரை செலவாகும். அந்த நிலையை தான் இப்போது மாற்றியுள்ளனர். இனிமேல் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு அந்த மருந்துகள் கிடைக் போகிறது. மேலும், அலன்-ஹெர்ண்டன்-டட்லி சிண்ட்ரோம் என்ற இந்த அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்ட 7 குழந்தைகளுக்கு முதல் ஓராண்டுக்கான 'டிரையாட்ரிகோல்' மருந்து இலவசமாக வழங்கப்பட உள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளார். நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்து, 7 குழந்தைகளின் பெற்றோரிடம் உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்கப்பட உள்ளது.

சிகிச்சை

MCT8 மரபணுவில் ஏற்படும் மாற்றங்களால் இந்த பாதிப்பு உருவாகிறது. மூளை செல்களுக்குள் தைராய்டு ஹார்மோன்கள் செல்வதில் இந்த மரபணு முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் செயல்பாடு பாதிக்கப்படும்போது குழந்தைகளின் மூளை வளர்ச்சி உள்ளிட்ட செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். இந்த குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க 'டிரையாட்ரிகோல்' அதாவது TRIAC என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. ஐரோப்பாவில் இந்த மருந்து கிடைத்தாலும், அதன் விலை கிட்டத்தட்ட 95% இந்தியர்களால் எட்ட முடியாத அளவுக்கு இருந்தது.

ஒரு குழந்தைக்கு ஓராண்டுக்கு தேவையான மருந்தின் விலை ரூ.4.68 கோடி முதல் ரூ.9 கோடி வரை இருந்தது. இது இந்திய குடும்பங்களால் சமாளிக்கவே முடியாத தொகையாக இருந்தது. இந்த சூழலில் தான் தற்போது மருந்தின் மூலப்பொருளை பயன்படுத்தி, புதிய முறையில் மருந்துகளை தயாரித்துள்ளனர். இதன் மூலம் செலவு ரூ.2.5 லட்சமாகக் குறைந்துள்ளது.

என்ன நடந்தது!

தன்னிடம் செக்அப்பிற்காக வந்த குழந்தைக்காக ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் சிவரஞ்சனி இது குறித்து சமூக வலைத்தளத்தில் உதவி கோரி பதிவிட்டார். பிரதமர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரிடம் உதவுமாறு கோரிக்கை விடுத்தார். இந்த பதிவு நெதர்லாந்தை சேர்ந்த PAF அமைப்பின் கவனத்துக்கு சென்றது. அந்த அமைப்பு நெதர்லாந்தின் உள்ள மருந்து நிறுவனத்தை தொடர்பு கொண்டது. புதிய மருத்துவ கவலை மூலம் பல கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு 7 குழந்தைகளுக்கும் தேவையான மருந்து தயாரிக்கப்பட்டது.

நிரந்தர தீர்வு

7 குழந்தைகளுக்கும் ஓராண்டுக்கான மருந்தை வழங்க மொத்தம் 14,200 யூரோக்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.15.08 லட்சம் செலவாகிறது. இதில் இந்தியாவில் டாக்டர் சிவரஞ்சனி சுமார் ரூ.6.09 லட்சத்தைத் திரட்டியுள்ளார். மீதமுள்ள சுமார் ரூ.9.13 லட்சம் நிதியை நெதர்லாந்து அமைப்பு திரட்டுகிறது. இதனால் 7 குடும்பங்களுக்கும் மருந்து இலவசமாகக் கிடைக்கிறது. இந்த மருந்துகள் இரண்டு தவணைகளாக இறக்குமதி செய்யப்பட உள்ளது.

தற்போதைக்கு 7 குழந்தைகளின் சிகிச்சை தர முடியும் என்றாலும் அடுத்தாண்டு மீண்டும் இதே சிக்கல் வரும். வெளிநாட்டில் இருந்து மருந்தை இறக்குமதி செய்வதே இந்த சிக்கலுக்கு காரணம் என்கிறார் டாக்டர் சிவரஞ்சனி. இந்தியாவிலேயே இந்த மருந்தை தயாரிக்கவும், பாதிக்கப்பட்ட மற்ற குழந்தைகளுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+