'பாதர் நம்ம உறவு கணவருக்கு தெரிஞ்சிடுச்சி'.. 'மரியாதை போயிடுச்சே'.. திருச்செந்தூர் பாதிரியார் ஆடியோ
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகிலுள்ள காயல்பட்டிணம் -சிங்கித்துறை பகுதியில் புதிதாக திருமணமான இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி பாலியல் செய்ததாக கிறிஸ்த்தவ பாதிரியார் மீது இளம்பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார் . " பாதர் நம்ம உறவு என் கணவருக்கு தெரிஞ்சிடுச்சி" என இளம்பெண் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இன்றைக்கு ஜென்சி கிட்ஸ் காலம்.இதில் திருமண உறவுகள் பொதுவாக நிலைப்பது இல்லை. திருமணத்திற்கு முன்பே பிரேக் அப் பிரேக் அப் என்று போய்கொண்டே இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின்பும் அப்படியான விஷயங்கள் அதிகமாகி வருகிறது. ஆனால் உண்மையில் கல்யாண வாழ்க்கையில் நம்பிக்கையும் பரஸ்பர புரிதலும் மிகவும் முக்கியம். ஆனால் தற்காலிக ஈர்ப்பு, உணர்ச்சிவசப்படுவது, கவனத்திற்காக ஏங்குவது, எல்லை மீறிய நெருக்கம் போன்ற காரணங்களால் சிலர் திருமணத்தை மீறிய உறவுகளில் சிக்கிக் கொள்வது நடக்கிறது.

கள்ளக்காதல்
முன்பு பிரபல தமிழ் சேனல்களில் கள்ளக்காதல் தான் எல்லா சீரியல்களிலும் டாபிக் ஆக இருக்கும். அப்படி எல்லாம் இல்லவே இல்லையே என்று பொங்கியவர்கள் எல்லாம், அய்யோ என்ன இப்படி மாறிவிட்டது என்று நினைக்கும் அளவிற்கு விபரீதமாகி வருகிறது. கள்ளக்காதல் என்பது ஆரம்பத்தில் சாதாரணப் பேச்சாகத் தொடங்குகிறது. அந்த பழக்கம், நாளடைவில் உணர்ச்சிப்பூர்வமான நெருக்கமாக மாறிவிடுகிறது. இதில் ஒருவர் மட்டுமின்றி இருவருமே தங்களது குடும்பப் பொறுப்புகளையும் உறவுகளின் நம்பிக்கையையும் மறந்து செயல்படுகிறார்கள்.
பாதிப்பு அதிகம்
இதனால் பாதிப்பு கணவன் அல்லது மனைவியுடன் நிற்பது இல்லை. குடும்ப உறவுகள், குழந்தைகளின் எதிர்காலம், சமூகத்தில் தனிநபர்கள் மீதான நம்பிக்கை எனப் பல நிலைகளிலும் பாதிப்பு அதிகமாகிறது. அதேபோல், நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட திருமண உறவில் ஏற்படும் இதுபோன்ற விரிசல்கள் குடும்பத்தின் அமைதியையே குலைத்துவிடுகிறது.சட்டத்தில் வேண்டுமானால் சிறை தண்டனை இல்லாமல் கள்ளக்காதலர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கலாம். ஆனால் சமூகத்தில் எந்த வாய்ப்பும் கிடையாது. திருச்செந்தூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
செல்போனில் தெரிய வந்த கள்ளக்காதல்
தொடர்ந்து கடந்த 20-ந் தேதி ஊர் திரும்பிய யுனோக்கிற்கு காதல் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் எழுந்துள்ளது. அப்போது அவரது செல்போனை பார்த்த போது அங்குள்ள மாதா ஆலயத்தின் பாதிரியாராக இருக்கக்கூடிய ஒருவருடன் நெருங்கிய உறவில் இருந்தது தெரியவந்துள்ளது. இரவு நேரத்தில் பாதருடன் வீடியோ காலில் பேசியது அந்தரங்கமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் தனது காதல் மனைவியிடம் கேட்டபோது அவர் பாதருடன் உறவில் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
காவல் நிலையத்தில் புகார்
இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் யுனோக் தான் வீட்டில் இல்லாததை பயன்படுத்தி பாதிரியார் தனது மனைவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்து ஏமாற்றியதாக ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ஆறுமுநேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவருக்கு தெரிந்துவிட்டது
இந்தநிலையில் " பாதிரியாரிடம் இளம்பெண் செல்போனில் நம்ம உறவில் இருந்தது என் கணவருக்கு தெரிவிந்துவிட்டது என கூறும்போது என் பெயர் மரியாதை 0
போயிடுச்சே " என பாதிரியார் புலம்பும் ஆடியோ ஆதாரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் வெளிநாட்டில் கப்பல் வேலைக்கு சென்ற நிலையில் அவரது இளம் மனைவியை பாதிரியார் பாலியல் செய்து ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




Click it and Unblock the Notifications
