3 பெண்களுடன் உறவு.. அதையும் தாண்டி பல பெண்கள்! என்விடியா போர்டிடம் ஒப்புக்கொண்ட ஜென்சன் ஹுவாங்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: என்விடியா நிறுவனத்தின் சிஇஓவாக இப்போது மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூன்று பெண்களுடன் தொடர்பு இருந்த நிலையில், இப்போது மேலும் சில பெண்களுடனும் தனக்கு தொடர்பு இருந்ததை அவர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிடம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் வருத்தமும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

உலகின் மிக பெரிய ஏஐ சிப் தயாரிப்பு நிறுவனமாக என்விடியா இருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே இந்த நிறுவனத்தை சுற்றி தான் மிக பெரிய சர்ச்சை எழுந்திருந்தது. இதன் சிஇஓ ஜென்சன், சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் கள்ள உறவில் இருந்துள்ளார். மேலும், இரு பெண்கள் உடனும் அவருக்கு உறவு இருந்துள்ளது.

Nvidia issue Jensen Huang Nvidia

என்டிவிடியா

இதை ஒப்புக்கொண்டு அவர் மன்னிப்பு கேட்ட நிலையில், என்விடியா தலைமை பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார். இருப்பினும், இரண்டே வாரங்களில் அவர் மீண்டும் சிஇஓவாக பதவியேற்றுள்ளார். இந்தச் சூழலில், ஜென்சன் தொடர்பாக மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஜென்சனுக்கு மேலும் சில பெண்களுடன் உறவு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது..

பல பெண்களுடன் உறவு

அதாவது அவருக்கு மேலும் சில பெண்களுடனும் தனக்கு தொடர்பு இருந்ததாகவும் அதை அவர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிடம் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.. அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் ஜென்சன் ஹுவாங்கிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அப்போது மூன்று பெண்களிடம் இருந்த உறவுகள் குறித்து அவர் விளக்கியுள்ளார்.

மேலும், அதையும் தாண்டி மற்ற பெண்களுடன் இருந்த உறவுகள் குறித்தும் அவர் தெரிவித்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இதற்காக அவர் வருத்தமும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

என்ன நடந்தது

சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் தொடர்பில் இருந்த சர்ச்சையை தொடர்ந்து, என்விடியா சிஇஓ பதவியிலிருந்து ஜென்சன் ஹுவாங் குறுகிய காலத்துக்கு மட்டுமே விலகியிருந்தார். அடுத்தகட்டமாகவே ஞாயிற்றுக்கிழமை இயக்குநர் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தச் சூழலில் தான் மறுநாள், திங்கள்கிழமை அவர் மீண்டும் சிஇஓ பொறுப்பை ஏற்றார்.

கூட்டத்தில் ஜென்சன் ஹுவாங்கின் செயல்பாடுகள் குறித்து விவாதித்த இயக்குநர்கள், நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு அவர் திரும்புவதே சிறந்த முடிவு என தீர்மானித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் இனி நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பாக வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என அவரிடம் வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

உற்சாக வரவேற்பு

நேற்று திங்கள்கிழமை மீண்டும் என்விடியா நிறுவனத்தின் சிஇஓவாக அலுவலகம் திரும்பிய ஜென்சன் ஹுவாங்குக்கு ஊழியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் உள்ள நிறுவனத் தலைமையகத்தில் அவர் வந்தபோது, ஊழியர்கள் கைதட்டி ஆரவாரம் செய்ததுடன் அவரது பெயரையும் முழக்கமிட்டனர். இது தொடர்பான பல வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன. சிலர் அவருக்கு கை கொடுத்தும் கட்டியணைத்தும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான ஆலிஸ் ஹுவாங், அதாவது சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் பெண் மெகாஸ்பீட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி ஆவார். அவர் சீனாவுக்காக உளவு பார்த்ததாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என சீனா நிராகரித்துள்ளது.

இந்தச் சூழலில், ஜென்சன் ஹுவாங்கின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சை, நிறுவனத்தின் இயக்குநர் குழு வரை சென்றுள்ளது. மேலும் பல தொடர்புகள் குறித்து அவர் ஒப்புக்கொண்டதாக வெளியாகியுள்ள தகவல், என்விடியாவை சுற்றியுள்ள விவாதத்தை மீண்டும் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+