தலித் ஆசிரியரின் டேபிளில் மலம்! வேங்கைவயலுக்கு குரல் கொடுக்கும் பா.ரஞ்சித்! இப்போது மௌனம் ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் திரைப்படங்கள் மூலமாகவும், பொது மேடைகளிலும் தொடர்ந்து குரல் கொடுப்பவராக அறியப்படுபவர் இயக்குநர் பா.ரஞ்சித். ஆனால், அரியலூர் மாவட்டம் கீழவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஒரு கொடூரமான சாதியப் பாகுபாடு சம்பவம் குறித்து அவர் இதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மௌனம் காப்பது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pa Ranjith Ariyalur

அரியலூர் பள்ளியில் நடந்தது என்ன?

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 260-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஆய்வக உதவியாளராகப் பணியாற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவரின் மேஜையில், கடந்த நவம்பர் 10-ம் தேதி மனித மலம் வீசப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி, பள்ளியில் பட்டியலின ஆசிரியர்களைத் தனியாக ஒரு அறையில் அமர வைத்து, மற்ற ஆசிரியர்கள் வேறு அறையில் அமர்ந்து சாதியப் பாகுபாடு காட்டுவதாகவும் அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாகக் கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர் முருகன் உட்பட மூன்று பேரைப் பணியிட மாற்றம் செய்துள்ளனர். மேலும், நேற்று (நவம்பர் 23) விசிகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி கைதாகினர். எதிர்க்கட்சியான பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உட்படப் பலரும் இந்தச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அன்று ஒரு பேச்சு... இன்று மௌனமா?

தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில், இயக்குநர் பா.ரஞ்சித் ஒரு தீவிர அரசியல்வாதியைப் போலக் களத்தில் இறங்கி, அன்றைய ஆளுங்கட்சிக்கு எதிராகத் தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் தொடர்ந்து குரல் எழுப்பி, ஆட்சியாளர்களுக்குப் பெரிய அளவில் அழுத்தம் கொடுத்தார்.

ஆனால், இன்று அதேபோன்ற ஒரு மனிதத்தன்மையற்ற செயல்.. அதுவும் மாணவர்கள் படிக்கும் ஒரு அரசுப் பள்ளியில் நடந்துள்ளது. தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் இந்தச் சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும், பா.ரஞ்சித் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு கண்டன அறிக்கையோ அல்லது சமூக வலைதளப் பதிவோ வெளியாகவில்லை.

சமூக வலைதளங்களில் எழும் கேள்விகள்

தற்போது தனது அடுத்தடுத்த திரைப்படப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் பா.ரஞ்சித், சமீபத்தில் டைம் இதழின் பட்டியலிலும் இடம்பிடித்திருந்தார். ஆனால், தமிழகத்தில் நடக்கும் ஒரு முக்கியமான சமூக நீதிப் பிரச்சனையில் அவர் அமைதியாக இருப்பதைப் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

திமுக ஆட்சியில் நடந்தால் மட்டுமே அது சாதிய கொடுமையாகத் தெரியுமா? தவெக ஆட்சியில் பட்டியலின ஊழியருக்கு எதிராக நடந்த இந்த அவலம் பா.ரஞ்சித்தின் கண்களுக்குத் தெரியவில்லையா? என நெட்டிசன்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆட்சி மாறினால், சமூக நீதிக்காகக் குரல் கொடுப்பவர்களின் அளவுகோலும் மாறிவிடுமா என்ற விமர்சனம் இப்போது தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+