தர்பூசணி திவாகரை பொளந்து கட்டிய சேரன்.. இப்படி ஒரு பதிலடியை எதிர்பார்த்து இருக்க மாட்டாரு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாட்டர் மெலன் திவாகர் இயக்குனர் சேரனை விமர்சித்து தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வரும் நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கிற மாதிரி இப்போ சேரனும் ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். சினிமா பிரபலங்கள் பலரும் ஷேர் செய்து சேரனுக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள். இந்த பஞ்சாயத்துக்கு பின்னாடி இருப்பது ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "யார் சரி" என்ற நிகழ்ச்சியில் நடந்த விவாதம் தான்.

"யார் சரி" என்ற நிகழ்ச்சியை சேரன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் திவாகரும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் ஒரு பக்கமும், சோசியல் மீடியா பிரபலங்கள் ஒரு பக்கமும் கலந்து கொண்டு விவாதித்து இருந்தனர். அந்த சமயத்தில் திவாகர் வழக்கம் போல தற்பெருமையாகவே பேசிக் கொண்டிருந்தார். நான் ஸ்கூல் படிக்கும்போது இருந்தே கலைத்திறன்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தேன்.

Cheran Watermelon Divakar Divakar

திவாகர் அலப்பறை

நான் கர்ணன் பட காட்சியை ரீ கிரியேட் செய்வதை பார்த்து பலரும், "சிவாஜி சாரை விட நீங்கதான் சூப்பரா நடிக்கிறீங்க என்று சொல்லுறாங்க" என்று தனக்குத்தானே பெருமையாக பேசிக் கொண்டிருக்க, இதனால் கடுப்பான சேரன், "சும்மா எதாவது சொல்லிட்டு இருக்காதீங்க, நீங்க சிவாஜி சாருக்கு இணை என்று சொல்ல முடியாது. அவர் சினிமாவின் பிள்ளை. நீங்க செய்யறதை பார்த்து எல்லாரும் பாராட்டல, அதை கலாய்க்கிறாங்க. அது கூட தெரியாம நீங்களாக எதையாவது பேசிட்டு இருக்கீங்க. உங்க வாய் தான் உங்களுக்கு எதிரி.

நாங்க சினிமாவுக்கு வந்து இத்தனை வருஷம் ஆனாலும், எங்களுக்கு முன்னோடி உடன் நாங்க எங்களை ஒப்பிடவே மாட்டோம். எங்களுக்கு தொழில் சினிமா, அதை நம்பி இருக்கிறோம் ஆனால் நீங்க அப்படி கிடையாது இதை ப்ரொபஷனலா செய்யல, உங்களுக்கு வேற ஒரு தொழில் இருக்கிறது. அதனால இதை ஏதோ யானோ தானோனு நினைச்சிட்டு இருக்கீங்க, நடிப்புதான் எங்க வாழ்க்கை என்று நினைச்சிட்டு நாங்க இருக்கிறோம். ஆனால் உங்களுக்கெல்லாம் அந்த மாதிரி கவலையே கிடையாது. முதலில் நமக்கான திறமையும், தகுதியையும் வளர்த்துக்கணும், அதற்குப் பிறகு அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு பேசணும்" என்று பதிலடி கொடுத்து இருந்தார்.

விவாத நிகழ்ச்சியில் நடந்தது

இந்த நிகழ்ச்சி சோசியல் மீடியாவில் பெரிதாக பேசப்பட்டது. அப்போது திவாகர், சேரனுக்கு எதிராக வீடியோ போட தொடங்கி விட்டார். "சேரனுக்கு என் மீது பொறாமை. அதனால்தான் அவர் என்னை அந்த நிகழ்ச்சியில் பேசவே விடல, அவருக்கு நான் சின்ன பையன். நான் ஸ்கூல் படிக்கும்போது அவர் இயக்கிய பாரதி கண்ணம்மா படத்தை பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போ இவர் நடந்து கொள்வது பார்க்கவே சகிக்கல. அவருக்கு இப்ப வாய்ப்பு இல்லாம சும்மா தானே இருக்கிறாரு? பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் பண்ணுன டாஸ்க்கை போய் பாருங்க" என்றெல்லாம் அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

சேரன் வெளியிட்ட பதிவு

இது போதாதுன்னு சேரனுக்கு எதிராக, என் ரசிகர்களுடன் நான் போராட்டம் நடத்த போறேன் என்று அறிவித்திருக்கிறார். இதை பலர் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பதை சேரன் தனது எக்ஸ் தளத்தில், ஒரு வீடியோவாகவே பதிவிட்டு இருக்கிறார். பிறகு அது குறித்து ஒரு நீண்ட விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார். அந்த பதிவில், "இதுவே உண்மையாக நடந்தது. அந்த நபரின் வாழ்க்கையை பற்றி செய்யாமல் தவிர்த்தோம். ஆனா அவரே அதை வெளியில் கொண்டுவர காரணமாகிவிட்டார்.

மன நோயாளியுடன் ஒப்பீடு

முடிந்தவரை அமைதியாக பொறுமையாக தான் இருந்தேன். ஆனால் அவரை எந்த கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது என தெரிந்தது. சிலர் நான் அவரை அந்த நிகழ்ச்சிக்கு அனுமதித்து இருக்கவே கூடாது எனவும், சிலர் சேரனுக்கு இது தேவையா? எனவும் கேட்கிறார்கள், சொல்கிறார்கள். ஒரு "மன நோயாளி" ரோட்டில் கிடப்பதை பார்த்து கடந்து செல்பவன் அல்ல நான். அவனை சரி செய்து விடமாட்டோமா...? இப்படியே விட்டால் எங்காவது அடிப்பட்டு ரோட்டில் கிடந்தால் பாவம் ஒரு உயிர்.. என காப்பாற்றி புத்தி சொல்ல, சரி செய்ய நினைப்பவர்.

ஒரு உயிர் போய்விட்டால் அவளை நம்பி உயிர்கள் இருக்குமே என கவலைப்படுபவன் நான். அவர் பேசுவதால் என் படைப்புகள் தாழ்ந்து விடப் போகிறதா என்ன? மரியாதை நான் காப்பாற்றும் கட்டிக்காக்கும் என் பெயரில் இல்லை. என் நடத்தையில் இருக்கிறது என நன்றாக அறிவேன். இதேநேரம் நாங்கள் அவரை வெளியேற்றி இருந்தால் இந்த சமூகம் இப்படித்தான் பேசுமா? அப்போதும் அவரை எப்படி அனுமதிக்காமல் விடலாம்? சேரன் இப்படி நடக்கலாமா? என்று பேசி தான் இருப்பார்கள். ஆகையால் நான் அங்கு நடந்து கொண்டது மனிதாபிமானமே.. கண்டிப்பா அது மற்றவர்கள் பார்வையில் புரியவில்லை என்பதற்காக நான் என்னை தொலைக்க தயாராக இல்லை" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இனி திவாகர் முடிவு

நிகழ்ச்சியிலும் திவாகருக்கு அட்வைஸ் செய்ய சேரன் முயற்சி செய்தார். ஆனால் திவாகர் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் எதிர்த்து எதிர்த்து பேசிக்கொண்டு இருந்தார். ஆனால் இப்போது பதிவிலும் திவாகரை மனநோயாளியுடன் ஒப்பிட்டு பேசி இருக்கிறார். இனியாவது திவாகர் திருந்துவாரா? இல்லை வழக்கம் போல மீண்டும் சேரனுக்கு என் மீது பொறாமை என்று வீடியோ வெளியிடப் போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+