நம்ம சென்னைக்கு என்ன ஆச்சு? காமாட்சி மருத்துவமனை சிக்னலில் நடந்த கொடூரம்! வீடியோ வெளியிட்ட நபர்!
சென்னை: வேளச்சேரி அருகே நடுரோட்டில் கத்தியைக் காட்டி மிரட்டப்பட்ட சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்து நபர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள போஸ்ட் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் மிக முக்கியமான மற்றும் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் பகுதிகளில் ஒன்று வேளச்சேரி மற்றும் பள்ளிக்கரணை இணைக்கும் ரேடியல் சாலை ஆகும். குறிப்பாக, காமாட்சி மருத்துவமனை சிக்னல் பகுதியில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், இந்தச் சிக்னல் பகுதியில் தனியாகக் காரில் சென்ற நபர் ஒருவருக்கு நேர்ந்த திகில் அனுபவம், தலைநகரின் சட்டம் - ஒழுங்கு குறித்த பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

நடந்தது என்ன?
பாதிக்கப்பட்ட அந்தப் நபர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் பதிவில், தான் சந்தித்த அந்தப் பயங்கரமான நிமிடங்களை விவரித்துள்ளார். வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து ரேடியல் சாலையை நோக்கித் தனது காரைத் திருப்பும்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அப்போது, 4 முதல் 5 இருசக்கர வாகனங்களில் (ஸ்கூட்டி மற்றும் பைக்குகள்) வந்த இளைஞர்கள் கும்பல் ஒன்று, சாலை விதிகளை மதிக்காமல் தாறுமாறாக வண்டிகளை ஓட்டி வந்துள்ளது. சாலையே தங்களுக்குச் சொந்தமானது என்பது போல வளைத்து வளைத்த ஓட்டிய அந்தக் கும்பல், மற்ற வாகனங்களின் வழியை மறித்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது.
முதலில், அந்தப் நபரின் காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு காரை அந்தக் கும்பல் வழிமறித்துப் பிரச்சனை செய்துள்ளது. சத்தம்போட்டு மிரட்டியதுடன், கையில் வைத்திருந்த கத்திகளைக் காட்டி அந்தக் கார் ஓட்டுநரை அச்சுறுத்தியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் நபர், சுதாரிப்பதற்குள் அந்தக் கும்பல் அடுத்ததாக இவரது காரையும் குறிவைத்துள்ளது. இவரது காரையும் வழிமறித்த அந்த நபர்கள், ஆபாசமாகக் கத்தியபடியே கையில் இருந்த கத்திகளைக் காட்டி கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் நடந்து கொண்டுள்ளனர்.
முதல்முறையாகப் பாதுகாப்பற்ற உணர்வு
இந்தத் திகில் சம்பவத்தைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்த அந்தப் பெண், மிகுந்த மன வேதனையுடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், *"என் நகரத்திற்கு என்ன ஆச்சு? இன்று சாலையில் கத்திகளைக் காட்டி மிரட்டப்பட்டேன். எனக்கு மிகவும் பிடித்த இந்தச் சென்னை நகரத்தில், கார் ஓட்டும்போது முதல்முறையாகப் பாதுகாப்பற்ற உணர்வை (Unsafe) அனுபவித்தேன்"* என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
சட்டம் - ஒழுங்கு குறித்த விமர்சனங்கள்
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, இதுபோன்ற பட்டப்பகல் வழிப்பறி மற்றும் கத்தி முனை மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
காவல்துறைத் துறையைத் தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர், ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இதுபோன்ற 'பைக் ரேஸ்' மற்றும் ரவுடி கும்பல்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.
ஐ.டி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் நிறைந்த காமாட்சி மருத்துவமனை சிக்னல் பகுதியில், போக்குவரத்துக் காவலர்கள் மற்றும் ரோந்துப் போலீசார் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதே சென்னை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வைரலாகி வரும் இந்த வீடியோவின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்களைக் காவல்துறையினர் விரைந்து கைது செய்ய வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
