அன்பில் மகேஷுக்கு எதிராக.. டீம் போட்ட அமலாத்துறை + லஞ்ச ஒழிப்புத்துறை! திமுக இறக்கும் பிரம்மாஸ்திரம்
சென்னை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படுமா? என்கிற பரபரப்பும் பதட்டமும் சூழ்ந்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டவர்களின் ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது.
தனியார் பள்ளிகளுக்கு அனுமதியளிக்கும் விவகாரத்தில் நடந்துள்ள லஞ்சம் மற்றும் ஊழல்களுக்காக, தமிழக காவல்துறையால் கைது செய்யப்ப ட்டு புழல் சிறையில் இருந்து வருகிறார் பள்ளிக்கல்வித்துறையின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ். இந்த ஊழலில் சம்மந்தப்பட்டர்கள் என மேலும் சிலரும் சிறையில் உள்ளனர்.

அன்பில் மகேஷ் இதுவரை தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்க ப்பட்டன. இந்த நிலையில், மீண்டும் இன்று அவர் மீதான ஜாமீன் மனு விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்த விவகாரத்தில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகிய துறைகளின் தாக்குதலை எதிர் கொண்டு வருகிறார் அன்பில் மகேஷ்.
இன்று விசாரணைக்கு வரவிருக்கும் ஜாமீன் மனுவின் மீது மேற்கண்ட இரண்டு துறைகளின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும் என்று திமுக தரப்பில் எதிர்பார்க்கப்படுவதால், அதனை எப்படி உடைத்து, ஜாமீன் பெறுவது என்கிற பாயிண்டுகள் குறித்து கடந்த ஒரு வாரமாக தீவிர ஆலோசனையை அன்பில் மகேஷின் வழக்கறிஞர்கள் டீம் நடத்தி முடித்திருக்கிறது.
இன்று நடக்கும் விசாரணையின் போது, கணைய அழற்சி உள்ளிட்ட பல்வேறு உடல்நலபாதிப்புகளால் அன்பில் மகேஷ் அவதியுற்று வருகிறார். அனைத்து கோணங்களிலும் போலீசாரின் விசாரணை முடிந்து விட்டது. அதனால், இதனை கருத்தில் கொண்டு அன்பில் மகேஷிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்கிற ரீதியில் அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர்கள் ஆர்கியூமெண்ட் வைக்கவிருக்கிறார்களாம்.
ஆனால், இதனை அவ்வளவு எளிதாக பார்த்துக்கொண்டு லஞ்ச ஒழிப்புத் துறையும் அமலாக்கத்துறையும் அமைதியாக இருந்து விடாது. அதன்படி, அன்பில் மகேஷுக்கு மிக நெருக்கமானவர் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக் குமார். இந்த ஊழல்களில் அவரது பங்கும் மிகப்பெரியது. அந்த வகையில் முத்துக்குமாரும், டிரைவர் சரவணன் ஆகியோரின் வாக்குமூலங்கள், அன்பில் மகேஷுக்கு எதிராக வலுவாக இருக்கிறது. மேலும் , விசாரணை விரிவடைந்தும் வருகிறது. அதனால், ஜாமீன் தரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கவிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு.
அதேபோல, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களும், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணபரிவர்த்தனை நடந்திருக்கிறது. அதன டிப்படையில் பி.எம்.எல்.ஏ. சட்டத்தின் கீழ் அன்பில் மகேஷுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின்படி, அன்பில் மகேஷ் மற்றும் முத்துக்குமார் உள்ளிட்டவர்களிடம் நேரடி விசாரணையை நாங்கள் நடத்த வேண்டும். அதற்கு இந்த நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று சொல்லி, அனுமதி கோரிக்கையை வைக்கவிருக்கிறார்களாம். இந்த பின்னணியில், அன்பில் மகேஷ் உள்ளிட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்கிற வாதங்களை அமலாக்கத்துறையும் வைக்கக்கூடும்.
இதற்கிடையே, இந்த ஊழலில் தொடர்புடைய 45 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அந்த கணக்குகளின் பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்யவும் அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. வங்கி கணக்குகளை ஆய்வு செய்து, சட்டவிரோத பணத்தில் வாங்கப்பட்ட சொத்துக்கள் இருப்பதை கண்டறிந்தால் அவைகளை முடக்கவும் திட்டமிட்டுள்ளதாம் அமலாக்கத் துறை.
அன்பில் மகேஷுக்கு எதிரான நடவடிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறையும் அமலாக்கத்துறையும் இப்படி திட்டமிட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் முதன் முதலில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்ட பி.டி.அரசக்குமார், ஒரு கட்டத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள அவரது ஜாமீன் மனுவை ரத்து செய்ய நீதிமன்றத்தில் முறையிட லஞ்ச ஒழிப்புத்துறை ஆலோசிப்பதாகவும் ஒரு தகவல் கிடைக்கிறது.
- சிறப்பு நிருபர் எழில்


Click it and Unblock the Notifications
