"லண்டனுக்கு போகமுடியாது".. கரப்பான்பூச்சி கட்சி சவ்ரவ் தாஸை நள்ளிரவில் தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ''லண்டனில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பேசுவதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்டோது என்னை பிரதமர் மோடியின் அரசு தடுத்து நிறுத்தியது. ஆனால் இந்த நடவடிக்கைகள் என்னை ஒருபோதும் தடுக்காது'' என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவ்ரவ் தாஸ் நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவ்ரவ் தாஸ் நேற்று நள்ளிரவில் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு விமானத்தில் புறப்பட தயாரானார். இதற்காக அவர் டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார்.

cockroach saurav das london

ஆனால் அவரால் லண்டன் புறப்பட்டு செல்ல முடியவில்லை. அவர் பயணம் தடைப்பட்டது. இதுதொடர்பாக சவ்ரவ் தாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கூறப்பட்டுள்ளதாவது:

''டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றபோது கோழை பிரதமர் மோடியால் நான் தடுத்து நிறுத்தப்பட்டேன். லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பேசுவதற்காக புறப்பட்ட எனக்கு தடை போட்டுள்ளனர்.

என்னை லண்டன் செல்ல விடாமல் குடியுரிமை அதிகாரிகள் தடுத்தனர். என்னுடைய பாஸ்போர்ட்டுக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், எல்எஸ்இ, எடின்பர்க் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பற்றி குறித்து உரையாற்ற எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த கோழைத்தனமான அரசு நான் லண்டன் செல்வதைத் தடுத்துவிட்டது. இந்திய மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், அறிவுசார்ந்த செயல்பாடுகளுக்கு எதிரான இந்த அரசு, நான் இத்தகைய புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்குச் செல்வதை கண்டு அஞ்சுகிறது?. இருப்பினும் இதுபோன்ற செயல்பாடுகள் என்னை தடுக்காது. நான் வரும்காலத்தில் லண்டன், பாரிஸ் உளபட பிற இடங்களுக்கு செல்வேன்'' என கூறியுள்ளார்.

அதேபோல் பிரதமர் மோடி தலைமயைிலான மத்திய அரசை கிண்டலும் செய்தார். இதுபற்றி அவர், ''நான் நீரவ் மோடியாக இருந்திருக்கலாம். விஜய் மல்லையாவாக இருந்திருக்கலாம். வங்கிகளிடமிருந்து ஆயிரக்கணக்கான கோடிகளைச் சுருட்டியிருந்தால் வெளிநாடு சென்றிருக்கலாம். அமைச்சர்கள் பதவி விலக மறுப்பதால், அவர்களால் அமைச்சரவையை விரிவாக்கம் கூட செய்ய முடியவில்லை'' என்று குற்றம்சாட்டி உள்ளார்.

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைழகம் டிசம்பர் 1ம் தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் வேலைவாய்ப்பின்மை, கல்வி மற்றும் அரசியல் உள்ளிட்டவற்றில் உள்ள பிரச்சனைகளை மையப்படுத்தி இளைஞர்களை வைத்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் நடத்தி வருகிறது என அதற்கான அழைப்பிதழில் கூறியுள்ளது. இதில் அபிஜித் தீப்கே மற்றும் சவ்ரவ் தாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதற்காக சவ்ரவ் தாஸ் புறப்பட்ட நிலையில் தான் டெல்லியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கடந்த அக்டோபர் மாதம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராட்டம் நடத்திய விவகாரத்தில் சவ்ரவ் தாஸ் கைது செய்யப்பட்டார். ஒருவாரம் வரை டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தற்போது சவ்ரவ் தாஸ் மீதான வழக்கை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணைக்கு சவ்ரவ் தாஸ் தொடர்ந்து ஆஜராகி வரும் நிலையில் தான் டெல்லியில் இருந்து லண்டன் பறப்பட்டபோது அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+