இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம்? கலெக்டர் ஆணையை கவனிச்சீங்களா? பரபர மதுரை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்ட முழுவதும் நேற்று இரவு 9 மணி முதல் நாளை காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா அறிவித்துள்ளார். குறிப்பாக அந்த உத்தரவில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் தொடர்புடைய வழக்குகள் ஆகியவற்றைச் செயல்படுத்தும் விதமாக தற்போதைய மத வழிபாடுகள் மற்றும் மலை மீதுள்ள தர்கா சட்டப்பூர்வமான மத நடவடிக்கைகள் காவல்துறையின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடைபெறும் என உச்சநீதிமன்ற இடைக்கால் தீர்ப்பை சுட்டிகாட்டியுள்ளார். இதனால் இன்று மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலைமலை மீது தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற உள்ளது. உச்ச நீதிமன்றம் மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்ற இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Thiruparankundram Karthigai Deepam Collector

இந்நிலையில் மதுரை மாவட்டம் முழுவதிலும் நேற்று இரவு 9 மணி தொடங்கி நாளை காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார், திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்டுள்ள அவசர சட்டம்-ஒழுங்கு சூழல் காரணமாக BNSS 163-ன் கீழ் (144) தடை உத்தரவு பிறப்பித்து ஆணை வெளியிட்டுள்ளார்.

அதில்," மதுரை மாநகர காவல் ஆணையர், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் / உட்கோட்ட நடுவர் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்கவும், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கவும், பொதுப் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்ட வேண்டிய அவசர சட்டம்-ஒழுங்கு சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு அமைப்புகள் திரண்டு வருவதாகவும், பொதுமக்கள் திருப்பரங்குன்றம் மலை மீது ஏறுவதைத் தடை செய்வது உட்பட BNSS பிரிவு 163-ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கக் கோரியும் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அளித்துள்ள அறிக்கையின் படியும் இந்த ஆணை பிறப்பிக்கப்படுள்ளது.

மதுரை மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த இரு சமூகத்தினரும் மதுரை மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், பெருமளவில் மக்கள் திரள்வதால் மோதல்கள் மற்றும் அமைதிக்கு பங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய பதற்றம் மதுரை மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும் என நம்பத்தகுந்த தகவல்கள் உள்ளது.

தற்போது நிலவும் சட்டம்-ஒழுங்கு சூழலைக் கருத்தில் கொண்டு, BNSS பிரிவு 163-ன் கீழ் பொது அமைதியைப் பாதுகாக்கவும், மனித உயிர்கள், பொதுப் பாதுகாப்பு மற்றும் அமைதியின் நலன் கருதியும், இத்தகைய கூட்டங்கள், போராட்டங்கள், ஊர்வலங்கள், தர்ணாக்கள் போன்றவற்றைத் தடை செய்யப்படுவதாகவும், பொது அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாக்க, சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடிய வகையில் திருப்பரங்குன்றம் மலை மீது யாரும் ஏறுவதைத் தடை செய்யப்பட்டுள்ளது.

அதனால் மதுரை மாவட்ட எல்லைக்குள் எந்தவொரு கூட்டம், போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் அல்லது பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், திருப்பரங்குன்றம் மலை மீது எவரும் ஏறுவதற்கும் இரவு 9 மணி முதல் 25.11.2026 அன்று காலை 10:00 மணி வரை 144 தடை உத்தரவு இருக்கும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் தொடர்புடைய வழக்குகள்ஆகியவற்றைச் செயல்படுத்தும் விதமாக வழக்கமான இடங்களில் நடைபெறும் தற்போதைய மத வழிபாடுகள் மற்றும் மலை மீதுள்ள தர்கா மற்றும் பிற நிறுவனங்களின் சட்டப்பூர்வமான மத நடவடிக்கைகள், அணுகல் மற்றும் பயன்பாடு காவல்துறையின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடைபெறும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் இன்று மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+