அலாஸ்காவில் 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது! இருளில் மூழ்குவது ஏன்? அடுத்த சூரிய உதயம் எப்போது?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணாத்தில் உள்ள உட்கியாவிக் நகரில் 65 நாட்கள் சூரிய உதயமே இருக்காது. கடந்த 18 ஆம் தேதி தான் இந்த ஆண்டின் கடைசியாக சூரியன் மறைந்தது. இத்துடன் அடுத்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதிதான் சூரியன் உதிக்கும்.

பரந்து விரிந்து காணப்படும் இந்த பூமியில் ஏராளமான அதிசயங்கள் கொட்டி கிடக்கின்றன. அந்த வகையில் சூரியன் உதிக்காத நாடு நார்வே என்பதை படித்திருக்கிறோம். அது போல் சூரியனே மறையாத நாடுகள் நுனாவுட்(கனடா), ஐஸ்லாந்து, பாரோ (அலாஸ்கா), ஸ்வீடன் உள்ளிட்டவை ஆகும். நார்வேயில் கூட மே மாத இறுதியில் இருந்து ஜூலை வரை 76 நாட்களுக்கு சூரியனே மறையாதாம். இப்படி கேட்க கேட்க ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் ஏராளம். அந்த வகையில் அலாக்ஸாவில் ஒரு நகரில் 65 நாட்களுக்கு சூரிய வெளிச்சமே இருக்காதாம்.

international sunrise

ஆம்! ஒவ்வொரு ஆண்டும் துருவ இரவு எனப்படும் ஆச்சரியத்தக்க நிகழ்வானது அலாஸ்காவில் நடைபெறுகிறது. இந்த கால கட்டத்தில் சூரியன் அடிவானத்திற்கு கீழ் மறைந்திருக்கும். இதனால் இந்த பகுதிக்கு நேரடியாக சூரிய வெளிச்சம் கிடைக்காது.

சூரிய வெளிச்சம் இருக்காது

நண்பகல் நேரத்தில் கூட பகல் வெளிச்சம் இருக்காது. ஏதோ மழை பெய்ய இருட்டிக் கொண்டிருப்பது போல் மங்கலாக இருக்கும். அந்த வெளிச்சத்துடன் தெருவிளக்குகள் எரியும். அதுதான் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வண்ணம் உதவுகிறது.

அன்றாட பணிகள்

இந்த சூரிய வெளிச்சம் இல்லாவிட்டாலும் அந்த பகுதி மக்கள் தங்களது அன்றாட பணிகளை செவ்வனே செய்து வருகிறார்கள். 2 மாதங்களுக்கு மேலாக சூரிய உதயமே இல்லாமல் அலாஸ்கா மக்கள் வாழும் வாழ்க்கை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்காக நகரமே இருளில் மூழ்கும் என்றில்லை, சூரிய வெளிச்சம் நேரடியாக இருக்காது. ஏதோ அந்தி சாயும் வேளை போல் நண்பகல் காட்சியளிக்கும் என வைத்துக் கொள்ளலாம்.

கடைசி சூரிய உதயம்

கடைசியாக கடந்த நவம்பர் 18ஆம் தேதி பிற்பகல் 1.42 மணிக்கு (அலாஸ்கா நேரம்) சூரியன் மறைந்தது. அத்துடன் அடுத்த சூரிய உதயம் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி சூரியன் உதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏன் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதாவது பூமி 23.5 டிகிரி சாய்வாக சுழல்வதே இதற்கு காரணம் என்கிறார்கள்.

international sunrise

என்ன காரணம் ?

வட அரைக் கோளத்தில் குளிர்காலம் நிகழும் போது வடதுருவம் சூரியனவிட்டு விலகி சாய்ந்த நிலையில்இருக்கும். அதிலும் அலாஸ்காவில் உள்ள உட்கியாக்விக் நகரம் ஆர்டிக் வட்டத்திற்கு வடக்கே 320 மைல தொலைவில் உள்ளது. இதனால் சூரியன் அடிவானத்திற்கு கீழ் சென்றுவிட்டது.

வைட்டமின் டி

எனினும் பகல் நேரங்களில் முழு சூரிய வெளிச்சம் இருப்பதில்லை. பொதுவாக மனிதர்களுக்கு சூரிய ஒளி அவசியம். இந்த ஒளி நம் தோலின் மீது படுவதால் வைட்டமின் டி கிடைக்கிறது. வேறு எந்த வகையிலும் இந்த வைட்டமின் டி-யை பெற முடியாது.

வைட்டமின் டி ஏன் முக்கியம்?

வைட்டமின் டி போதிய அளவு இல்லாவிட்டால் குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ்எனும் நோயும் பெரியவர்களும் எலும்பு பிரச்சினைகள், எலும்பு முறிவு, தசை வலி, உடலில் வலுவில்லாமல் இருப்பது, முடி கொட்டுதல், காயம் ஏற்பட்டாலும் மெதுவாக ஆறுதல் உள்ளிட்டவை ஏற்படும்.

international sunrise

84 நாட்கள் சூரியன் மறையாத அதிசயமும் உண்டு

எனவே இந்த உடல்நல பிரச்சினைகளை போக்க அந்த அலாஸ்கா பகுதி மக்கள் சிறப்பு ஒளி சிகிச்சை விளக்குகளையும் வைட்டமின் மாத்திரைகளையும் (supplement)பயன்படுத்துகிறார்கள். இந்த பகுதியில் 4400 பேர் வசிக்கிறார்கள். இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம், வேட்டையாடுதல், மீன்பிடித்தல் உள்ளிட்டவை ஆகும். இவர்கள் 4400 பேரும் ஒற்றுமையுடன் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்கள். இது ஒரு புறம் இருக்க, கோடை காலங்களில் உட்கியாவிக் பகுதி, 84 நாட்களுக்கு தொடர்ந்து சூரிய வெளிச்சமே இருக்கும் அனுபவத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+