திருப்பரங்குன்றம் தீபம் LIVE: 144 தடை உத்தரவு – 7 ஆயிரம் போலீஸ் குவிப்பு

Live
Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி மலை மீது கல் தூணில் தீபம் ஏற்றக்கோரி தாக்கல் செய்த வழக்கில் கடந்த 20ம் தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியது. அப்போது மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என மதுரை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பை உறுதி செய்யப்பட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம் பஞ்சோலி அமர்வு வழங்கிய இந்த இடைக்கால தீர்ப்பு கார்த்திகை நாளான இன்று ஒருநாள் மட்டுமே பொருந்தும் எனவும் உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்தியது.

ஆனால் தமிழக அரசு சார்பில் இடைக்கால தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதோடு மதுரை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு 9 மணி முதல் நாளை காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் உச்சநீதிமன்றம் சொன்னது போல் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுமா? இல்லை வழக்கம்போல் உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளதோடு, திருப்பரங்குன்றம் கோவில் அமைந்துள்ள மதுரை முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதுதொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகளை இங்கு பார்க்கலாம்.

Thiruparankundram Deepam  Thiruparankundram Issue  Karthigai Deepam

Nov 24, 2026, 9:10 am IST

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தேரோட்டம் வெகுவிமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ‘அரோகரா’ முழக்கத்துடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
Nov 24, 2026, 9:03 am IST

திருப்பரங்குன்றம் மலைக்கு ஏறும் வழியில் இரும்பு தடுப்புகள் அமைத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் யாரும் மலை மீது ஏறிவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Nov 24, 2026, 8:57 am IST

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோவில் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 7 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Nov 24, 2026, 8:55 am IST

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து திருப்பரங்குன்றம் உள்பட மதுரை மாவட்டம் முழுவதும் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 9 மணிக்கு விதிக்கப்பட்ட இந்த தடை உத்தரவு நாளை காலை 10 மணி வரை அமலில் இருக்கும்.
Nov 24, 2026, 8:53 am IST

உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி இன்று மாலையில் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? இல்லை முந்தைய திமுக அரசை போல் தவெக அரசும் அதனை நிறைவேற்றாமல் புறக்கணிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Nov 24, 2026, 8:52 am IST

கார்த்திகை தீபத்திருநாளான இன்று மாலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 20ம் தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+