அப்போ என் தொகுதி மக்கள் உயிர் முக்கியம் இல்லையா! கர்நாடகா காங்கிரஸ் பெண் எம்எல்ஏ திடீர் ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் 2 பேரை மிதித்து கொன்ற காட்டு யானைகளை தனது தொகுதியையொட்டிய வனப்பகுதிக்குள், வனத்துறையினர் விரட்டியதால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்எல்ஏ நயனா மோட்டம்மா தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.

in-karnataka-mudigere-congress-mla-quits-over-elephants-drive-from-belur-to-bhadra-tiger-reserve

கர்நாடகாவின் சிக்கமகளூர் மாவட்டம் முடிகெரே சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வெற்றி பெற்றவர் நயனா மோட்டம்மா. இவர் திடீரென்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதற்கான ராஜினாமா கடித்ததை நேற்று அவர் கர்நாடகா சட்டசபை சபாநாயகர் அலுவலகத்தில் வழங்கினார். சபாநாயகர் அலுவலகத்தில் சபாநாயகர் ஜிஎஸ் பட்டீல் இல்லை. இதனால் அவர் சபாநாயகர் அலுவலகத்தில் கடிதத்தை வழங்கி சென்றார்.

ராஜினாமா தொடர்பாக விரைவில் சபாநாயகர் ஜிஎஸ் பட்டீலையும் சந்தித்து பேச நயனா மோட்டம்மா முடிவெடுத்துள்ளார். இந்த திடீர் ராஜினாமாவின் பின்னணியில் யானைகள் இடம்பெயர வைத்த சம்பவம் தான் உள்ளது. அதாவது சிக்கமகளூர் மற்றும் ஹாசன் ஆகிய மாவட்டங்கள் பக்கத்தில் பக்கத்தில் உள்ளன. ஹாசன் மாவட்டம்பேலூர் தாலுகாவில் கடந்த சில நாட்களில் காட்டு யானைகள் 2 பேரை மிதித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இதையடுத்து அந்த காட்டு யானைகளை பத்ரா புலிகள் காப்பகத்துக்கு இடம்பெயர வைப்பதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் தொடங்கி உள்ளனர். பத்ரா புலிகள் காப்பகம் என்பது சிக்கமகளூர் மாவட்டத்தில் சிக்கமகளூர், முடிகெரே மற்றும் சிருங்கேரி உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளுக்குள் வருகிறது. இதனால் காட்டு யானைகளால் இந்த 3 சட்டசபை தொகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டள்ளது.

இதனை கண்டித்து தான் முடிகெரே சட்டசபை தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ நயனா மோட்டம்மா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அரசு கேட்கவில்லை. இதனால் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதுபற்றி நயனா மோட்டம்மா கூறியதாவது:

''எங்களிடம் சொல்லாமலே யானைகளை இடமாற்றுவதற்கான பணி நடக்கிறது. எங்களிடம் சொன்னால் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம் என்று அறிந்தே சொல்லவில்லை. நாங்கள் எங்கள் தொகுதி மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை உள்ளது. ஏனென்றால் அவர்கள் எங்களுக்கு ஓட்டளித்துள்ளனர். கர்நாடகா அரசு என்பதால் மக்களால் உருவாக்கப்பட்டது. வேறு எந்த வழியிலும் உருவாகவில்லை.

இந்த செயல் என்பது முடிகெரோ, சிருங்கேரி, சிக்கமகளூர் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளில் வசிக்கும் மக்களின் உயிர்களை விட ஹாசன் மக்களின் உயிர் தான் மேலானது என்பதை காட்டுகிறது. இது சரியில்லை. இது ஏழை மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சனையாகும். மாநில அரசு தனது நிலைப்பாட்டை உடனடியாக மாற்றி கொள்ள வேண்டும்'' என்று கொந்தளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+