மீண்டும் பேரழிவை ஏற்படுத்த போகும் பெருவெள்ளம்? நேபாளத்தில் 5.3 ரிக்டர் நிலநடுக்கம்.. ஏன் ஆபத்து?

Subscribe to Oneindia Tamil

காத்மாண்டு: நேபாளத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோஷி மாகாணத்தின் லெலெப் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. இதன் அதிர்வுகள் இந்தியா, நேபாளம், பூடான், வங்கதேசம் மற்றும் சீனாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நாடு நேபாளம். இங்கு சமீப காலமாகவே மோசமான இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட இங்கு ஏற்பட்ட மோசமான இயற்கை பேரிடரில் பாதிப்புகள் மிக மோசமாக இருந்தது. இதனால் உயிரிழப்புகளும் மோசமான பொருட்சேதமும் கூட ஏற்பட்டது.

Nepal Earthquake

நிலநடுக்கம்

இதற்கிடையே இன்றைய தினம் நேபாளத்தில் 5.3 ரிக்டரில் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி காலை 7.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பூமிக்கு அடியில் சுமார் 20 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திபெத் எல்லைக்கு அருகே, தப்லேஜங் மாவட்டத்தில் உள்ள ஒலாங்சுங் கோலா பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளன. குறிப்பாக பீகார், மேகாலயா, மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கத்தின் வங்காளத்தின் ஜல்பைகுரி, அலிபுர்துவார், கூச் பெஹார் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அங்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீடுகள், மின்கம்பங்கள் மற்றும் மின்சாரக் கம்பிகள் அதிர்ந்தன.

அச்சம்

காலை நேரத்தில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். நடைப்பயிற்சிக்காக வெளியே சென்றிருந்தவர்களும் நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழப்புகளோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஆபத்து என்ன

நிலநடுக்கத்தால் உடனடி பாதிப்பு இல்லை என்றாலும் இன்னொரு சிக்கல் உள்ளது. அதாவது இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் பாறைகள் சரிந்து ஆற்றின் பாதையில் அது விழுந்திருக்கும். இது ஆற்றில் தண்ணீரை பிளாக் செய்து, ஒரு தற்காலிக ஏரியை உருவாக்கும். அதில் தண்ணீர் சேர்ந்து கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் அது உடையும்போது அது பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளத்தை ஏற்படுத்தும். சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் இதன் காரணமாகவே ஏற்பட்டிருந்தது. எனவே, இந்த ஆபத்தையும் அதிகாரிகள் கவனிக்க வேண்டி உள்ளது.

இதற்கிடையே அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் தனியாக 2.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 15 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+