விஜய பிரபாகரன் டான்ஸ் வீடியோவை வைத்து மீண்டும் ட்ரோல்.. சீ...ச்சீ இப்படியா பேசுவாங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைத்தளங்களில் ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் குறித்து கலாய்ப்பது இப்ப ரொம்பவே சாதாரணமாகிவிட்டது. ஆனால் ஒரு வீடியோவில் சில நொடிகள் மட்டும் கட் செய்து அதை வைத்து ஒருவரை தொடர்ந்து கேலி செய்வது எந்த அளவுக்கு நியாயம்? இப்போது விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் விஷயத்தில் இப்படி ஒரு விவாதம் தான் நடந்து கொண்டிருக்கிறது.

Vijay Prabhakaran Vijayakanth DMDK

சமீபத்தில் தேமுதிக எம்எல்ஏ சுதீஷின் மகள் திருமணத்தில் விஜய பிரபாகரன் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்ட வீடியோக்கள் வெளியானது. அதிலிருந்து பிரேமலதாவின் தோற்றம், விஜய பிரபாகரனின் முகபாவனை அவர் நடந்து கொண்ட விதம் என பல விஷயத்தை வைத்து மீம்ஸ் போட்டு வருகிறார்கள். சிலர் தொடர்ந்து அவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருவதால் விஜயகாந்த் ரசிகர்களும் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Vijay Prabhakaran Vijayakanth DMDK

விஜய பிரபாகரன் டான்ஸ்

இந்த பஞ்சாயத்து இன்னும் சோசியல் மீடியாவில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது விஜய பிரபாகரன் டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அவர் அதில் பல பாடல்களுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார். முதலில் புஷ்பா பாட்டு, பிறகு நாட்டு நாட்டு, கவாலா என பல பாடல்களுக்கு அவர் டான்ஸ் ஆடி இருக்கிறார். ஒரு திருமண நிகழ்ச்சியில் அல்லது கொண்டாட்டத்தில் ஒருவர் சந்தோஷமாக நடனம் ஆடுவது இயல்பான விஷயம்தான். ஆனால் அந்த வீடியோவில் இருந்து சில காட்சிகளை மட்டும் தனியாக வெட்டி குறிப்பிட்ட முகபாவனைகளை வைத்து மீண்டும் ட்ரோல் செய்து பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.

Vijay Prabhakaran Vijayakanth DMDK

நமக்கும் நாளை நடக்கலாம்

அவர் நடனமாடிய முழு வீடியோவை பார்க்காமல் சில நொடிகளை மட்டும் வைத்து மீம்ஸ் உருவாக்கி அவரை கேலி செய்யும் விதமாக பதிவிடுவது விஜயகாந்த் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று விஜய பிரபாகரன் வீடியோவை வைத்து சிரிக்கலாம் நாளை இதேபோன்று நம்முடைய குடும்பத்தில் ஒருவருடைய வீடியோவை சில நொடிகள் மட்டும் வெட்டி தவறான அர்த்தத்தில் பரப்பினால் நமக்கு எப்படி இருக்கும்?

Vijay Prabhakaran Vijayakanth DMDK

யோசிக்க வேண்டும்

சமூக வலைத்தளங்களில் எதையும் பதிவிடுவதற்கு முன்பு, அந்த வீடியோவால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை கொஞ்சம் யோசிக்க வேண்டியது தான். ஒருவரை விமர்சிப்பதற்கும், அவமானப்படுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசத்தை புரிந்து கொண்டு மீம்ஸ் போடுவது, வீடியோ பகிர்வது இருந்தால் நன்றாக இருக்கும் எல்லாவற்றையும் ட்ரோல் செய்யும் விஷயமாகவே பார்க்காமல் சில நேரங்களில் மற்றவர்களின் தன்மானத்துக்கும் மதிப்பு கொடுக்க வேண்டியது அவசியம். விஜயகாந்த் ரசிகர்கள் இப்போது முன்வைக்கும் ஆதங்கமும் அதுதான்.

Vijay Prabhakaran Vijayakanth DMDK
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+