Gold Price Today: தங்கம் விலை இன்றும் தடாலடி உயர்வு! இனி அவ்ளோதான் குறையாது போல.. 2 நாளில் 2,000 அதிகரித்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold Price Today) 2-வது நாளாக இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று, இன்று என இரண்டே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.2 ஆயிரம் அதிகரித்துள்ளது நகை பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை திடீரென மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.920 அதிகரித்து ரூ.93,720-க்கும், ஒரு ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.115 அதிகரித்து ரூ.11,715-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்றும் எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.175-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Price Today Gold price surges again today Up by 2 000 in 2 days

தங்கம் விலை திடீர் உயர்வு

கடந்த இரு வாரங்களாகவே தங்கம் விலை சரமாரியாக சரியத் தொடங்கியது. ஒரு சவரன் ஒரு லட்சத்திற்கு கீழ் குறையுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு லட்சத்திற்கு கீழ் குறைந்ததோடு, ஒரு சவரன் ரூ.91,720 என்ற மிகப்பெரிய சரிவை சந்தித்தது. வரலாற்றில் இல்லாத அளவு தங்கம் விலை குறைவதற்கு அமெரிக்காவின் வட்டி விகிதம் அதிகரிப்பு மற்றும் ஏஐ நிறுவனங்களின் பங்குகள் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஆகியவையே காரணமாகவே கூறப்படுகிறது.

திடீரென தங்கம் விலை மளமளவென சரிந்தது நகை பிரியர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறி வந்த நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. நேற்று மட்டும் சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.1080 உயர்ந்து, ரூ.92,800க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.135 உயர்ந்து ரூ.11,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய ரேட் என்ன?

திடீரென தங்கம் விலை உயர்ந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இன்றாவது குறையுமா என எதிர்பார்த்தவர்களுக்கு மீண்டும் அதிர்ச்சியே மிஞ்சியது. இன்றும் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.920 அதிகரித்து ரூ.93,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.115 அதிகரித்து ரூ.11,715-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இரண்டே நாளில் சவரனுக்கு ரூ.2,000 அதிகரித்துள்ளது நகை பிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வெள்ளி விலையில் இன்றும் எந்த வித மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை

24-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.93,720 (இன்று)
23-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.92,800 (நேற்று)
22-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.92,800
21-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.91,720
20-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.92,080
19-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.95,840

18-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.97,720
17-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.99,760
16-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,00,320
15-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,00,920
14-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,00,920

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+