மதுரையில் முதல் டிவிஷன் பெஞ்ச்சில் இன்று ஜிஆர் சுவாமிநாதன், சுமதி அமர்வு.. பெரிய ட்விஸ்ட் இருக்கு

Subscribe to Oneindia Tamil

மதுரை : சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முதல் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளாக ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி இன்று வழக்குகளை விசாரிக்கிறார்கள். எனவே திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவு முறையாக அமல்படுத்தப்படாவிட்டால், உயர்நீதிமன்றத்தில் உடனடியாக முறையீடு செய்ய இந்து அமைப்புகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க வாய்ப்பும் இருக்கிறது.

G R Swaminathan Tirupparankundram

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் 24-ந்தேதி ( இன்று) தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 20-ந்தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், கார்த்திகை தீபத்தை இந்து அமைப்புகள் குறிப்பிடும் தூணில் தீபம் ஏற்றிக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.

அதேபோல் திருப்பரங்குன்றம் கோயில் தேவஸ்தான நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே மலை உச்சிக்குச் சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இக்குழுவின் எண்ணிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியர், கோயில் செயல் அலுவலர், இந்திய தொல்லியல் துறை மற்றும் காவல் ஆணையருடன் ஆலோசித்து முடிவு செய்வார் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஆனால் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது.இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வராததால், 'திருப்பரங்குன்றம் தீபத் துாணில் தீபம் ஏற்ற வேண்டும்' என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து, மாநில அரசு செயல்படுமா அல்லது வேறு ஏதாவது காரணம் சொல்லி நிராகரித்துவிடுமா என்ற எதிர்பார்ப்பு எல்லா தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கார்த்திகை தீப நாளான இன்று, மதுரையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2 நாட்களாக திருப்பரங்குன்றம் பகுதி பரபரப்பாகவே காணப்படுகிறது. நேற்று இரவு மதுரை மாவட்டத்தில் 144 தடை விதிப்பதாக கலெக்டர் உத்தரவிட்டு இருக்கிறார். இந்தநிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை விசாரிக்கும் நிர்வாக நீதிபதி வேல்முருகன் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறையில் செல்கிறார்.

எனவே 2-வது பெஞ்ச் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி ஆகியோர் முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ள பொதுநல வழக்குகள் உள்ளிட்டவைகளை விசாரிக்கிறார்கள். எனவே முதல் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளான மேற்கண்ட இருவரிடமும் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் சம்பந்தமான கோரிக்கைகளை விசாரிக்கும்படி வக்கீல்கள் முறையிடலாம் என கோர்ட்டு வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இன்று காலை 10.30 மணி அளவில் நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்க தொடங்கும்போது, வக்கீல்கள், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நீதிபதிகள் முன்பு தெரிவிக்க அனுமதிக்கப்படும் என்பதால் பரபரப்பு எழுந்துள்ளது.

என்ன நடந்தது

கடந்த 2025 நவம்பரில், ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 'தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்' என, கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அமர்வு, தீபம் ஏற்ற உத்தரவிட்டது. ஆனாலும் தீபம் ஏற்றப்படவில்லை. இதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி 6ல், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கில் தான் இடைக்கால உத்தரவாக தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆட்சியர் என்ன முடிவெடுக்க போகிறார் என்பது தான் இப்போது பெரிய பரபரப்பாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+