கொளத்தூரில் போட்டியிட வேண்டாம் தலைவரே.. திமுக சீனியர்கள் ட்விஸ்ட்.. ஸ்டாலின் ஷாக்
சென்னை: திருச்சி கிழக்கு, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. கொளத்தூர் தவெக எம்எல்ஏவாக இருந்த வி.எஸ். பாபு உடல்நலக்குறைவால் கடந்த வாரம் உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த பொதுத்தேர்தலில் மு.க. ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இடைத்தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடுவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இதற்கு திமுக சீனியர்களே எதிராக நிற்பதாக புகார் எழுந்துள்ளது.
சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்தது. தவெக ஆட்சிக்கு வருவதை தடுக்க திமுக அதிமுக முயற்சித்ததாக தவெக குற்றம் சாட்டியது. தவெக ஆட்சி நீடிக்காது. சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தவெக எம்எல்ஏ வி.எஸ் பாபு மரணத்தால், கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தல் பேச்சு பரபரப்பாகியுள்ளது.

கொளத்தூர் இடைத்தேர்தல்
2026 தேர்தலுக்கு முன்பு கொளத்துார் எந்த கட்சியாலும் அசைக்க முடியாத கோட்டையாக இருந்தது. முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் 2011, 2016, 2021 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் ஹாட்ரிக் வெற்றி பெற்றிருந்தார் ஸ்டாலின். முதல்முறையாக சிட்டிங் முதலமைச்சராக போட்டியிட்டார். கொளத்தூர் தொகுதியில் வெற்றி என குறித்துவைத்து விட்டு தான் திமுகவினர் மற்ற தொகுதிகளில் பணியாற்றுவார்கள்.
ஆனால் இந்தமுறை திமுகவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் ஸ்டாலின் அதிர்ச்சி தோல்வியடைந்தார். திமுக, ஸ்டாலினை தவெகவினர் கடுமையாக விமர்சித்தனர். முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில், "அப்பாவை காணோம்" என்று கூறினார். கொளத்தூரில் உங்க தலைவருக்கு கொத்து புரோட்டா போட்டுவிட்டோம் என்று தவெகவினர் கூறினார்கள். திமுக தரப்பில் அப்செட் ஆனார்கள். ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல சென்றபோது, சேகர்பாபு உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் அழுதார்கள்.
வேண்டாம் தலைவரே
சட்டம் ஒழுங்கு, விலைவாசி உயர்வு, தவெக நிர்வாகிகள் செயல்பாடுகளில் அதிருப்தி போன்றவற்றால் மக்கள் ஆட்சி மீது அதிருப்தியில் உள்ளனர். கொளத்தூர் இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெறுவதே தவெகவுக்கு சரியான பதிலடியாக இருக்கும் என திமுகவினர் கூறுகிறார்கள். ஸ்டாலின் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் சென்றால், தமிழக அரசியலில் மாற்றம் இருக்கும். தவெக ஆட்சி தடுமாறும் என்று கணக்கு போடுகிறார்கள்.
ஆனால் திமுக சீனியர்களோ, "வேண்டாம் தலைவரே. கொளத்தூரில் போட்டியிடுவது சரி வராது" என ஷாக் கொடுத்துள்ளார்களாம். ஸ்டாலின் தவிர, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, சென்னை மேயர் பிரியா, பூச்சி முருகன், எழிலன், ரங்கநாதன், சரிதா என்று திமுக வேட்பாளர் ரேஸ் சூடுபிடிக்கிறது. திமுக நிர்வாகிகள் கூறுகையில், " தவெக ஆட்சி கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது. இதை திமுக ஆதரவு அலையாக மாற்ற இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை.
ஸ்டாலின் ஷாக்
கொளத்தூர் தோல்வி ஏற்கனவே திமுகவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் தோற்றால் கடுமையான பாதிப்பு ஏற்படும். தற்போதைய சூழலில் 6 மாதங்களில் பொதுத்தேர்தல் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகிவிட்டது. அப்போது போட்டியிட்டு மீண்டும் முதலமைச்சராவதே சரி. மேலும் ஒரு தொகுதியில் வேட்பாளராக நிற்பதை விட, 6 தொகுதிகளில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தால் தாக்கம் அதிகம் இருக்கும் என்று சீனியர்கள் கருதுகிறார்கள். இதனால் தலைவர் ஸ்டாலின் தீவிர யோசனையில் இருக்கிறார்" என்றனர்.


Click it and Unblock the Notifications
