நடத்தையில் சந்தேகம்.. ‘விப்ரோ' பெண் இன்ஜினியரை கொன்று பிணத்துடன் தங்கிய இன்போசிஸ் ஊழியர்!
மும்பை: இருவரும் பிரபல ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள். கைநிறைய சம்பளம். சாதாரணமாக ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. குடும்பத்தினரிடம் அறிமுகம் ஆகி திருமணத்துக்கு சம்மதமும் பெற்றுவிட்டனர். தேதி குறித்து திருமணம் நடைபெற வேண்டியது மட்டுமே பாக்கி. ஆனால் திடீரென்று அந்த காதல் ஜோடியின் வாழ்க்கையில் புயல் வீசி உள்ளது.

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் புனேவில் விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றி வந்த 27 வயது பெண்ணை, அவரது காதலனான இன்போசிஸ் ஊழியர் கொலை செய்துவிட்டு இரவு முழுவதும் பிணத்துடன் இருந்த சம்பவம் அதிர வைத்துள்ளது.
மகாராஷ்டிராவின் வார்தா பகுதியை சேர்ந்தவர் கோமல் தஹாலே (வயது 27). இவர் புனேவில் உள்ள 'விப்ரோ' நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.அதேபோல் புல்தானா பகுதியை சேர்ந்தவர் சுபம். இவர் புனேவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
இவர்கள் 2 பேரும் ஒரே நகரில் பணியாற்றி வந்தனர். இதனால் 'டேட்டிங்' செயலி ஒன்றின் வழியாக இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் 'டேட்டிங்' சென்றனர். இந்த பழக்கம் காதலாக மாறியது. உருகி உருகி காதலித்தனர். இவர்களின் காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. அவர்களும் ஒப்புக்கொண்டனர். விரைவில் திருமணம் செய்ய இருவரும் தயாராகினர்.
இந்நிலையில் தான் கோமல் தஹாலே வசிக்கும் ஹிஞ்சவாடியில் உள்ள பிஜி அறைகஅகு காதலன் சுபம் நேற்று முன்தினம் இரவில் சென்றார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சுபம், தனது காதலி கோமலை அடித்து கொன்றுள்ளார். கோமலின் முகம், கழுத்து, தலையில் ஓங்கி மிதித்தும், உதைத்தும் சுபம் கொன்றுள்ளார்.
பிறகு இரவு முழுவதும் காதலி கோமல் உடலுடன் பிஜி-யிலேயே சுபம் இருந்துள்ளார். பிறகு நேற்று காலையில் ஹிஞ்ச்வாடி போலீசாருக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர். கோமல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கொலை நடந்தது தெரியவந்தது. கொலையான கோமலுக்கு, தனது காதலன் சுபம் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் இன்னொரு பெண்ணுடன் உறவில் உள்ளதாக கோமல் நினைத்தார். இதுதொடர்பாக இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவிலும் கோமல் நடத்தையில் சந்தேகப்பட்டு அந்த பெண் பற்றி சுபத்திடம் கேட்டார். ஆத்திரமடைந்த சுபம் தனது காதலி என்ற கூட பாராமல் கோமலை கொடூரமாக தாக்கி கொன்றுள்ளார். போலீசாரின் விசாரணையின்போது இந்த சம்பவத்தை சுபம், வாக்குமூலமாக பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக புனே மண்டலம் - 2க்கான துணை காவல் ஆணையர் பிரதீப் ஜாதவ் கூறுகையில், ''கோமல் மற்றும் சுபம் ஆகியோர் காதலித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் கடந்த சில ஆண்டுகளாக நெருங்கிய காதல் உறவில் இருந்தனர். சுபம் நடத்தையில் கோமல் சந்தேகப்பட்டார். இதுதொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனையால் கொலை நடந்துள்ளது. சுபம் கைது செய்யப்பட்டுள்ளார்’’ என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
