தலைக்கு மேல் கத்தி.. சட்டம் ஒழுங்கை கவனிங்க சார்.. முதல்வருக்கு கூட்டணி எம்எல்ஏக்கள் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சி 6 மாதங்களை கடந்துவிட்டது. திமுக, அதிமுகவுக்கு மாற்று என சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. சட்டம் ஒழுங்கு பாதிப்பு, தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மீதான புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி கட்சி எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார். காவிரி, திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்ட பில பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது. ஆனால் பெரும்பாலான எம்எல்ஏக்கள், சட்டம் ஒழுங்கு பற்றி போர் கொடி தூக்கி விஜய்க்கு சீரியஸான அட்வைஸ் வழங்கியுள்ளார்களாம்.

சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இரு பெரும் திராவிட கட்சிகளை தோற்கடித்து தவெக வென்றது. ஆனால் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை அவர்களுக்கு கிடைக்கவில்லை. திமுக ஆதரவில் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயற்சித்தார். இதனிடையே காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறின.

tvk-alliance-mlas-raise-law-and-order-concerns-give-serious-advice-to-cm-vijay

தவெக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டம்

தவெக ஆட்சியமைக்க ஆதரவு வழங்கினர். கம்யூனிஸ்ட்கள் மட்டும் தவெகவின் கூட்டணியில் இடம்பெறவில்லை. மற்ற கட்சிகள் தவெகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளன. கட்சி தொடங்கிய இரண்டே வருடங்களில், 50 ஆண்டு திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது தவெக. பெரும் மாற்றத்தை தருவார்கள் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

சட்டம் ஒழுங்கு பாதிப்பு, தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மீதான புகார் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் மீண்டும் சதி செய்வதாக புகார் எழுந்தது. இந்நிலையில் முதலமைச்சர் விஜய் நேற்று மாலை கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை சந்தித்து பேசினார். பசுமைவழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.

விஜய்க்கு அட்வைஸ்

ஒவ்வொரு கட்சி எம்எல்ஏக்களையும் தலா 15 நிமிடங்கள் சந்தித்து விஜய் பேசினார். அப்போது அவர்கள், "தேர்தல் வாக்குறுதிகள் ஏராளமான வழங்கப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்றாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கடந்த திமுக ஆட்சி மீது அதிருப்தி ஏற்படுவதற்கு, நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளும் காரணம். மகளிர் உரிமைத்தொகை உயர்த்துவது உள்ளிட்ட முக்கியமான அறிவிப்புகளை நிறைவேற்றுவது அவசியம். காவிரி பிரச்சனையில் டெல்டா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்ததாக அறிவிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு முதலில் முக்கியத்துவம் கொடுங்கள். இதேநிலை தொடர்ந்தால் உங்களுக்கு வாக்களித்த மக்களே எதிராக திரும்புவார்கள். பாலியல் வன்கொடுமைகள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை தேவை. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் நடவடிக்கை எடுத்தால் ஆட்சி மீது நம்பிக்கை ஏற்படும். திருப்பரங்குன்றத்தில் மதச்சார்பின்மை நிலைநிறுத்த வேண்டும். 3 மாதங்களுக்கு ஒருமுறை எம்எல்ஏக்களை சந்திக்க வேண்டும்" என்றனர்.

எம்எல்ஏக்களின் கருத்துகளை விஜய் நோட் போட்டு குறித்து வைத்துள்ளாராம். "விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று நம்பிக்கையுடன் பதிலும் அளித்தாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+