கள்ளக்குறிச்சி கேஸ்.. ஐஜி பிரவீன் பெயரை நீதிபதி சொன்னதும்.. வேண்டாம் என்ற தமிழக அரசு.. யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷுக்கு எதிரான வழக்கை வடக்கு மண்டல ஐஜி பிரவீன் குமார் விசாரிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் பிரவீன் குமாரின் பெயரை நீதிபதி குறிப்பிட்டதும், அரசு வழக்கறிஞர் வேறு ஒரு அதிகாரியின் பெயரைப் பரிந்துரைப்பதாகக் கூறியதும், அதனை நீதிபதி ஏற்க மறுத்ததும் தற்போது தமிழ்நாடு அரசியலிலும் காவல்துறை வட்டாரத்திலும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

நீதிமன்றத்தில் நடந்த பரபரப்பு வாதம்

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அளித்த புகாரின் பேரில் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், கடந்த ஜூலை மாதமே புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? யாரையும் காப்பாற்ற முயற்சி செய்யாதீர்கள் எனக் கடுமையாக எச்சரித்தார்.

Who Is North Zone IG Praveen Kumar Abhinapu TVK opposes investigation Kallakurichi MLA - IAS case

தொடர்ந்து, இந்த வழக்கை யார் விசாரிக்கிறார்கள் என நீதிபதி கேட்டதற்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. விசாரிப்பதாக அரசுத் தரப்பு பதிலளித்தது. ஆனால், அதனை ஏற்காத நீதிபதி, இந்த வழக்கை வடக்கு மண்டல ஐஜி பிரவீன் குமார் விசாரிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

நீதிபதி பிரவீன் குமாரின் பெயரைச் சொன்னதும் சற்றுத் தயங்கிய அரசு வழக்கறிஞர், "வேறு ஒரு உயர் அதிகாரியின் பெயரை நாங்கள் பரிந்துரை செய்கிறோம்" என்று கூறினார். ஆனால், அதனைத் திட்டவட்டமாக நிராகரித்த நீதிபதி, "வேறு யாரும் வேண்டாம்.. வடக்கு மண்டல ஐஜி பிரவீன் குமார் தான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்" என உறுதியாக உத்தரவிட்டார்.

அரசு தயங்குவது ஏன்? யார் இந்த ஐஜி பிரவீன் குமார்?

நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வேறு அதிகாரியின் பெயரைப் பரிந்துரைக்க முயன்றதால், "அரசு ஏன் பிரவீன் குமாரைப் பார்த்துத் தயங்குகிறது? யார் இவர்?" என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பிரவீன் குமார் அபிநப் 2005-ஆம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரியாவார். காவல்துறையில் மிக நேர்மையான, யாருக்கும் அஞ்சாத கறார் அதிகாரி என்ற நற்பெயரைப் பெற்றவர்.

இதற்கு முன்பு சேலம் மாநகர காவல் ஆணையராகவும், டிஜிபி அலுவலகத்தில் ஐஜி ஆகவும் பணியாற்றிய இவர், கடந்த மே மாதம் நடைபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றத்தின் போது சென்னை தலைமையிடமாகக் கொண்ட வடக்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டார். கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்டங்கள் இவரது கட்டுப்பாட்டின் கீழ்தான் வருகின்றன.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எந்த அரசியல் அழுத்தத்திற்கும் அடிபணியாமல், சட்டத்தின்படி மட்டுமே நடவடிக்கை எடுக்கும் குணம் கொண்டவர் எனக் காவல்துறை வட்டாரத்தில் அறியப்படுகிறார்.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் சிக்கியுள்ள இந்த வழக்கில், கறார் அதிகாரியான பிரவீன் குமார் விசாரணை நடத்தினால், எவ்வித அரசியல் தலையீடும் இன்றி உண்மைகள் அனைத்தும் வெளியே வந்துவிடும் என்பதாலேயே அரசுத் தரப்பு வேறு அதிகாரி பெயரைச் சொல்ல முயன்றதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆனால், நீதிமன்றமே நேரடியாகப் பிரவீன் குமாரை நியமித்திருப்பதால், இந்த வழக்கின் விசாரணை இனி மிகத் தீவிரமாகவும் நேர்மையாகவும் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+