திருவண்ணாமலையா? திருப்பதியா? டக்னு கிரிவலப் பாதை ஸ்பீக்கரில் வந்த "தெலுங்கு".. ஸ்டன் ஆன பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அந்த சத்தத்தை கேட்டீங்களா? மொத்த பக்தர்களும் ஒரு நிமிடம் திகைத்துப் போகும் அளவுக்கு அப்படி என்ன சத்தம் கேட்கிறது? திருப்பதி தேவஸ்தானத்தில் ஒலிக்கும் அறிவிப்பு என்று நினைத்துவிடாதீங்க.. இது நம்ம திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஒலிக்கும் குரல்! அப்படி என்னதான் நடக்கிறது தெரியுமா?

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தபடியே உள்ளனர்.. இன்று அதிகாலை முதலே கிரிவலப் பாதையிலும், அண்ணாமலையார் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது..

Tiruvannamalai Karthigai Deepam 2026 Tamil Nadu Police

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.. முக்கியமாக இன்று மாலை மலை உச்சியில் ஏற்றப்பட உள்ள மகா தீபத்தைக் காண பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.. அதேபோல், மலையைச் சுற்றி கிரிவலம் செல்லவும் பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.

வருடா வருடம் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகா தீபத்தை பார்ப்பதற்காகவும், கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் திருவண்ணாமலையில் கூடுகிறார்கள்.. இவ்வளவு பெரிய கூட்டத்தில் பக்தர்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக உதவி கிடைக்க வேண்டியது அவசியம்.

அதனால்தான் போலீசார், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், கூட்டத்தை கண்காணித்தல், திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுப்பது என பல பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பக்தர்களின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், வாகன நிறுத்துமிடங்கள் என பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஆடியோ சத்தம் கேளுங்க

இந்த நிலையில், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஸ்பீக்கர் மூலம் ஒரு குரல் ஒலிக்கிறது. இதைக் கேட்கும் பலரும் திகைத்து நிற்கிறார்கள்.. காரணம், ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் ஒலிக்கும் அறிவிப்பு போலவே இருக்கிறதாம்..

ஆனால், இந்த அறிவிப்பு ஒலிப்பது திருப்பதியில் கிடையாது. நம்ம திருவண்ணாமலை கிரிவலப் பாதையில்தான்! பக்தர்களுக்கு உதவி செய்வதற்காக தமிழக காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள "MAY I HELP YOU" பூத்தில் இருந்துதான் இந்த அறிவிப்பு ஒலிக்கிறது.

கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் போலீசாரை அணுகுவதற்காக இந்த உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஸ்பீக்கர் மூலமாகவும் அறிவிப்புகள் செய்யப்படுகின்றன.

ஸ்பீக்கரில் தெலுங்கு அறிவிப்பு

அங்குள்ள ஸ்பீக்கரில், "ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக்கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இங்கு வருகை தந்துள்ள பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினர் உங்களுக்கு உதவிட இங்கே இருக்கிறார்கள் என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

கிரிவலப் பாதையில் May I Help You பூத் அமைக்கப்பட்டுள்ளது என்பதையும், உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாங்கள் இங்கே இருக்கிறோம் என்பதையும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

இந்த ஆன்மிகப் பயணத்தில் உங்களுக்கு உதவ, திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக இங்கு பணியில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பதைத் தெரியப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என்று தெலுங்கிலேயே அறிவிப்பு வெளியாகி வருகிறதாம்.. இதைக்கேட்டுதான் பக்தர்கள், இது ஆந்திராவா? தமிழ்நாடா? என்று ஒருநிமிடம் குழம்பி விடுகிறார்களாம்.

ஏன் தெலுங்கு?

திருவண்ணாமலை தமிழ்நாட்டில் இருக்கிறது. இங்கு காவல்துறை அமைத்துள்ள உதவி மையத்தில் ஏன் தெலுங்கில் அறிவிப்பு செய்ய வேண்டும்?

இதற்குப் பின்னணியில் ஆந்திராவிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்துள்ள ஏராளமான பக்தர்களும் ஒரு காரணமாக இருக்கலாம். அண்டை மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கும் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் புரிய வேண்டும் என்பதற்காக அவர்களது மொழியில் அறிவிப்பு செய்யப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை..

எனினும், தமிழ்நாட்டில், அதுவும் திருவண்ணாமலையில் தெலுங்கில் ஒலிக்கும் இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+